டில்லி, செப்.21– டில்லித் தமிழ்ச் சங்கத்தில் கி.வீரமணி திராவிடர் கழக அறக்கட்டளையின் சார்பில் ஆண்டுதோறும் தந்தை பெரியார் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் 17.09.2025 அன்று தந்தை பெரியார் மற்றும் அண்ணா பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் டில்லி தமிழ் சங்கத் தலைவர் சக்தி பெருமாள், துணைத் தலைவர் இராகவன், பொதுச்செயலாளர் இரா.முகுந்தன், செயற்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, கோவிந்தராஜன், தொடக்கப்பள்ளி சங்கத் தலைவர் முத்துசாமி, ஈரோடு, மேனாள்துணைத்தலைவர் நாக ஜோதி , மேனாள்செயற்குழு உறுப்பினர் சாந்தி மற்றும் தமிழ்நாடு அரசு இல்லம், ஓய்வு பெற்ற அதிகாரி தெய்வசிகாமணி,முருகன் இட்லி கடை நிறுவனர் மனோகர், சென்னை ஆகியோர் தந்தை பெரி யார், அறிஞர் அண்ணா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், உரையாற்றிய தொடக்கப் பள்ளி சங்கத் தலைவர் முத்துசாமி அவ ர் ஆற்றிய ஆசிரி யப் பணி பற்றி, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். தனது மூச்சிருக்கும் வரை ஆசிரியர்களுக்கு சேவை செய்வதே தனது வாழ்நாள் இலட்சியம் என்றார்.
தெய்வசிகாமணி பேசுகையில், தந்தை பெரியார் கல்வி, பெண் முன்னேற்றத் திற்காக பாடுபட்டவர், அவரது கொள்கைகளை பின்பற்றி வாழ்வோமாக என்றார்.
நிகழ்ச்சியில் மூத்த தமிழ் அறிஞர்கள், சான்றோர் பெருமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.