தேசிய காப்பீடு கழக பீகார் மாநில மேனாள் இயக்குநர் முனைவர் முஷிபிரசாத் மற்றும் பேராசிரியர் திரிபுவன் தாஸ் இருவரும் பாட்னாவில் இருந்து தந்தை பெரியார் பிறந்தநாள் அன்று பெரியார் திடல் வருவதாக திட்டமிட்டு இருந்தனர். வரும் வழியில் முனைவர் முன்ஷி பிரசாத்திற்கு உடல் நலம் குன்றியதால் வேலூரியில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் இரண்டு நாள் சிகிச்சையில் இருந்தார். சிகிச்சை முடிந்ததும் இருவரும் இன்று (21.9.2025) அதிகாலை சென்னையில் உள்ள பெரியார் திடல் வருகை தந்தனர். அவர்கள் பெரியாரின் நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு அய்யாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு மீண்டும் பாட்னா புறப்பட்டனர்.