பழையதை மாற்றக் கூடாது என்பதும், பழையவைகள் எல்லாம் தெய்வாம்சத்தால் ஏற்பட்டதென்பதும், பழைய செய்கைகளோ, பழைய தத்துவங்களோ – பழைய மாதிரிகளோ – பழைய உபதேசங்களோ – முக்காலத்துக்கும், முடிவு காலம் வரைக்கும் இருப்பதற்கும், பின்பற்றுவதற்கும், தகுதியான தீர்க்க தரிசனத்துடன் தெய்வீகத் தன்மையில் ஏற்பட்டது என்று சொல்லப்படுமானால் அவைகளை மதவெறியர்களுக்கும், பழைமையில் பிழைக்கக் காத்துக் கொண்டிருக்கும் சோம்பேறிச் சுயநலக் கூட்டங்களுக்கும் விட்டுவிட வேண்டுமே ஒழிய, அவற்றைப் பொது சனச் சாதாரண நித்தியர் வாழ்க்கையில் கொண்டு வந்து கலக்கி முற்போக்குக்கும், சவுகரியத்துக்கும் தொல்லை விளைவிக் கலமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’