மும்பை, செப்.21 மராட்டிய மாநிலம் மும்பை புறநகர் மாவட்டம் கண்டிவாலி பகுதியில் உள்ள கோவிலில் 52 வயது நபர் பூசாரியாக பணியாற்றி வந்தார்.
இதனிடையே, கோவில் பூசாரி 19 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், வெள்ளிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு தன்னை தனிமையில் சந்திக்கும்படி வற்புறுத்தி இளம்பெண்ணுக்கு கோவில் பூசாரி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் பூசாரி மீது கண்டிவாலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பான புகாரைத் தொடர்ந்து பூசாரியிடம் விசாரிக்க அவரை தேடியுள்ளனர். அப்போது, பூசாரி பூஜை செய்யும் கோவிலுக்கும் சென்று காவல்துறையினர் தேடியுள்ளனர். அப்போது, பூசாரி கோவில் வளாகத்தில் உள்ள மின் விசிறியில் பூசாரி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் பூசாரியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பூசாரி தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.