ராமேஸ்வரம், செப்.20- ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஜூலை 22ஆம் தேதி முனியசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு சென்ற மீனவர்கள் தங்கராஜ் (40), லிங்கம் (59), செல்வம் (50), இருளாண்டி (50) ஆகியோரை, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இவர்களது காவல் 18.9.2025 நிறைவடைந்ததை தொடர்ந்து 4 மீனவர்களும் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 4 மீனவர்களுக்கும் தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் கடந்த ஜூலை 13ஆம் தேதி சிறை பிடிக்கப்பட்ட ராமேசுவரத்தை சேர்ந்த 7 மீனவர்களுக்கு செப்.24 வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தமிழ்நாடு அரசின்
வேளாண் வணிகத் திருவிழா
வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது
சென்னை செப். 20- வேளாண் வணிக திருவிழா சென்னையில் செப்டம்பர் 27, 28ஆம் தேதிகளில் நடைபெற வுள்ளது.
இதுகுறித்து வேளாண்துறை சார்பில் வெளியிடப்பட்ட வேளாண் வணிகத் திருவிழா செய்திக் குறிப்பு: சென்னை நந்தம்பாக்கத்தில் செப். 27, 28ஆம் தேதி களில் நடைபெறவுள்ளது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் 200-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் அங் காடிகள். 300-க்கும் மேற்பட்ட வேளாண் விளை பொருட்கள் காட்சிப் படுத்தப்பட உள்ளன. பாரம்பரிய இயற்கை உணவு திருவிழாவும் இதில் இடம்பெறுகிறது.
இதுதவிர விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரை யாடல் மற்றும் அரசு திட் டங்கள் பெறுவதற்கு முன்பதிவும் நடை பெற உள்ளது.
இந்த வணிகத் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
இதில் வேளாண் உற்பத்தி ஆணையர் வ.தட்சிணாமூர்த்தி, வேளாண் வணிகத் துறை ஆணையர் த.ஆபிரகாம். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பி.குமரவேல் பாண்டியன் மற்றும்
அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வணிகத் திருவிழாசிறப்பாக நடத்தி முடிப்பதற்
கான பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்
பட்டன.