துரோகங்களை தொலைத்தெறிந்த பெரியார்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி  துரோகங்களை தொலைத்தெறிந்த பெரியார் என்ற தலைப்பில் கூறிய கருத்துக்களை சம்பவங்களை கேட்டு ஆச்சரியமடைந்தேன்

1932இல் தந்தை பெரியார் சோவியத் ரஷ்யா பயணம் செல்வதற்கு முன்பே கம்யூனிஸ்ட் Manifesto வை மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார். சோவியத் ரஷ்யாவில் நீண்ட காலம் பயணித்து திரும்பி வந்த நிலையில் அன்றைய ஆங்கில அரசு பெரியாருக்கு சோவியத் கம்யூனிஸ இயக்கம் பணம் அளிக்கிறது என்று எண்ணிக் கொண்டு பெரியாரின் இயக்கத்தை தடை செய்ய நினைத்து வந்த காலம். அதை அறிந்த பெரியார் இயக்கத்தை காப்பாற்ற அமைதி காத்தார். இதைக் கண்ட அவருடன் பயணித்த சிலர் கருத்து வேறுபாடு கொண்டார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் திருத்துறைப்பூண்டி இல் 1936 நடைபெற்ற தஞ்சை மாநாட்டில் பெரியார் விளக்கமாக பேசினார். ஆனாலும் A S கண்ணப்பன், S ராமநாதன், K A P விசுவநாதம், P பாலசுப்பிரமணியன்

குருசாமி வந்த பலர் எதிராக செயல்பட்டது மட்டுமல்லாமல் தனியாக பிரிந்து போய் சிலர் கட்சி ஆரம்பித்தார்கள். பிரிந்தவர்கள் வெற்றி பெறவில்லை. ஆனாலும் கருத்து வேறுபாடு கொண்டவர்களை எதிரியாக கருதாமல் மீண்டும் திருந்தி வருந்தி வரக்கூடும் என்று பெரியார் கருதி வந்தார். ஆயினும் ஒரு சிலர் வருமானவரித்துறைக்கு அழுத்தம் கொடுத்து பெரியார் திடல் உள்ளிட்ட சொத்துக்களை முடக்க நினைத்தனர் என்பது கூடுதல் தகவல். முன்பெல்லாம் ரயில் நிலையங்களில் பிராமணர்களுக்கு தனி உணவகம் இருந்து வந்தது. அதை மாற்ற அரசுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதி 15 நாட்களில் நிலைமையை மாற்றினார்.. இயக்கம் இல்லாமல் கொள்கையை வைத்துக்கொண்டு முன் செல்ல முடியாது என புரிந்து கொண்ட பெரியார் இந்த மாதிரி சில போராட்டங்களை தொடர்ந்து கைவிடாமல் செய்து வந்து கொண்டிருந்தார். இந்த விவரங்களை எல்லாம் குருவிக்காரம்பை வேலு அவர்கள் புத்தக வடிவில் வெளியிட்டார். மேலும் கூடுதல் விவரங்களை ஆசிரியர் கருத்துக்களை Periyar Vision OTT இல் முழுமையாக இன்றே பாருங்கள், பகிருங்கள். வணக்கம்.

– M சாரங்கபாணி,

ராமநாதபுரம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *