அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக போராடிய 2250 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திடீர் மரணம் கொலை செய்யப்பட்டார்களா? பரபரப்பு தகவல்கள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பிரேசிலியா, செப்.20  தென் அமெ ரிக்க கண்டத்தின் வடபகுதியில் சுமார் 70 லட்சம் சதுர கி.மீ பரப் பளவில் அமேசான் காடுகள் பரந்து விரிந்து காணப்படுகிறது. உலக நாடுகளில் உள்ள மொத்த காடுகளையும் சேர்த்தாலும் அவற்றையெல்லாம் விட அமேசான் காடுகளின் பரப்பளவு அதிகம். இங்குள்ள மரங்களில் இருந்து ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி டன் ஆக்சிஜன் வெளியேற்றப்படுகிறது.

பூமியின் நுரையீரல்

இதனால்தான் ‘பூமியின் நுரையீரல்’ ‘புவியின் சுவாசம்’ என அமேசான் காடுகள் கொண்டாடப் படுகிறது. இந்த காடுகளில் 39 ஆயிரம் கோடி மரங்கள் உள்ளன. 16 ஆயிரம் வகையான உயிரினங்கள் வசிக்கின்றன. பல பழங்குடி இனத் தவர்களுக்கும் புகலிடமாக உள்ளது.

பிரேசில், பெரு, பொலிவியா, கொலம்பியா, வெனிசூலா, கயானா, சுரினாம், பிரெஞ்ச் கயானா, ஈகுவடார் ஆகிய 9 நாடு களில் பரந்து விரிந்து கிடக்கிறது அமேசான் காடுகள். இந்த காடுகள் தற்போது உலகமயமாக்கல் மற்றும் மனித பேராசை காரணமாக அழிக்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தன.

இதனை எதிர்த்து உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். லண் டனை தலைமையிடமாக கொண்டு குளோபல் விட்னஸ் என்ற ஆய்வு நிறுவனம் உலக அளவில் செயல்பட்டு வருகிறது. மனித-இயற்கை இடர்பாடுகள், சுரண்டல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறது. தற்போது பகீர் அறிக்கை ஒன்றை இது வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கடந்த 2012-ஆம் ஆண்டு தொடங்கி கடந்த ஆண்டு வரை (2024), 12 ஆண்டுகளில் அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 2,253 பேர் யாரும் அறியாத முறையில் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பிரேசிலில் 365 பேர், கொலம்பியாவில் 250 பேர், பெருவில் 225 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் (2024) மட்டும் 124 பேர் இறந்துள்ளதாகவும், ஆண்டு தோறும் இந்த பலி எண் ணிக்கை உயர்ந்து வருவதாகவும் தெரிவித் துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *