* திராவிடர் கழக மேனாள் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச. இன்பக்கனி பெரியார் உலக நன்கொடைக்கு ரூ.1 லட்சத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி ரூ.30 ஆயிரம், கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு. குமாரதேவன், ரூ.25 ஆயிரம் என இயக்க நன்கொடைக்கென்று தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினர். மாவட்ட தி.மு.க. பிரதிநிதி ச. முத்து மாரியப்பன் விடுதலை சந்தா வழங்கினார். (17.9.2025)
சென்னை, செப்.19 தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம் 17.9.2025 அன்று மாலை 6.30 மணி அளவில் சென்னை கலைஞர் கருணாநிதி நகர் அருகிலுள்ள எம்.ஜி.ஆர். நகர் அங்காடி (மார்க்கெட்) பகுதியில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் கரு.அண்ணாமலை தலைமையில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.
தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் வரவேற்புரையாற்றினார். தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ. நாத்திகன், ஆவடி மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க. இளவரசு, வடசென்னை மாவட்ட தலைவர் தளபதிபாண்டியன், செயலாளர் சு.அன்புச்செல்வன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாலை 6 மணி அளவில் ‘இனநலம்’ குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ. குமரேசன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்ட பொறுப்பாளர் அண்ணா மகிழ்நன், கழக பரப்புரை செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர்கள் ச.பிரின்சு என்னாரெசு பெரியார். சே.மெ.மதிவதனி. திமுக மாவட்ட பிரதிநிதி ச.முத்து மாரியப்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் செ.கரிகால்வளவன், ஆகியோர் உரையாற்றினர்.
பெரியார் பிறந்த நாள் மலரினை
தமிழர் தலைவரிடம் இருந்து பெற்றனர்
திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேரா.சுப.வீரபாண்டியன் “விடுதலை-தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள்” மலரை வெளியிட்டு உரையாற்றினார். பெரியார் பெருந் தொண்டர் சி. செங்குட்டுவன் முதல் படியை பெற்றுக் கொண்டார்.
மேடையின் கீழே இறங்கி வந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடமிருந்து பெரியார் பிறந்த மலருக்கு உரிய நன்கொடையினைத் தந்து தோழர்கள் பலரும் மலரினைப் பெற்றுக் கொண்டனர்.
நிறைவாக, திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தென் சென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் எம்ஜிஆர் நகர் கழகத் தோழர்கள் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர், துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், விழாவில் உரையாற்றியவர்களுக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், சு.குமாரதேவன், தமிழக மூதறிஞர் குழு பொருளாளர் த.கு. திவாகரன், ச.இன்பக்கனி, சி. வெற்றிச்செல்வி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வி.கே.ஆர். பெரியார் செல்வி, தி.என்னாரெசு பிராட்லா, மாநில இளைஞரணி செயலாளர் சோ. சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ. ராகவன், தென் சென்னை மாவட்ட காப்பாளர் மு.ந. மதியழகன், சா. தாமோதரன், தாம்பரம் சு. மோகன்ராஜ், கூடுவாஞ்சேரி ராசு, விடுதலை நகர் ஜெயராமன், தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், சி.செங்குட்டுவன், தென் சென்னை இளைஞர் அணி தலைவர் ந. மணிதுரை, இளைஞர் அணி துணைத் தலைவர் அ.அன்பு, இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் இரா. மாரிமுத்து, அ. அன்பரசன், பெரியார் களம் இறைவி, தேவ. நர்மதா, கொடுங்கையூர் கோ. தங்கமணி, தங்க. தனலட்சுமி, ச.மாரியப்பன், கலைமணி, க.தமிழ்ச்செல்வன், த.ராஜா, க.ச. பெரியார் மாணாக்கன், மு.செல்வி,செ.பெ.தொண்டறம், திருப்பத்தூர் பெரியார் வாசகர் வட்டம் எம்.என். அன்பழகன், விஜயா அன்பழகன், மணிமேகலை சுப்பையா, ஆட்டோ சேகர், புரசை கோபி, கோ. அன்புமணி, உடுமலை வடிவேலு, நல். இராமச்சந்திரன், எம்.டி.சி. இராஜேந்திரன், ஆட்டோ சேகர், செ.அன்புச்செல்வி, த.மரகதமணி, சே.மெ. கவி நிசா, அரங்க.சுரேந்திரன், மு. திருமலை, நா. பார்த்திபன், த.பர்தீன், அப்துல்லா, க. சுப்பிரமணியன், ச. சனார்த்தனன், டெய்லர் கண்ணன், பெரியார் மணிமொழியன், வெ.கா.மகிழினி, கா.முருகையன், ஆ. செகதீசன், திராவிடச் செல்வன், முனைவர் முகம் இளமாறன், க. கார்த்திகேயன், கோ.க. மகராசன், சோ. நடராசன். இரா. ஏழுமலை, ப. தியாகராஜன், அய்ஸ் அவுஸ் உதயா, முல்லைவேந்தன். மு.கனகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி நன்றி உரையாற்றினார்.