ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள், வெகுவாக மதிக்கப்படுகின்ற ஒரு பார்ப்பனரல்லாத தலைவர். இந்நாட்டின் பிற பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டைத் தனியாகப் பிரித்து விட வேண்டுமென்பதைப் பகிரங்கமாகவே அவர் சொல்லி வருகிறார். அத்தகைய தீர்மானம் ஒன்று, சமீப காலத்தில் நடைபெற்ற சேலம் ஜஸ்டிஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானைப் போலவே தமிழ்நாடும் ஒரு சுதந்திர அரசாங்கத்தைக் கொண்ட தனி நாடாகவே அவரால் சித்தரிக்கப்படுகிறது. இன்றைய நிலையை அடிப்படையாய்க் கொண்டு பார்த்தால், பாகிஸ்தானத்தில் முதல் அமைச்சராக இருப்பதற்கு ஜின்னாவிற்கு எவ்வளவு உரிமை உண்டோ, அவ்வளவு உரிமை தமிழ்நாட்டின் தனி ஆட்சியில் இராமசாமி நாயக்கருக்கு உண்டு.
திருவாங்கூர் முன்னாள் திவான்,
சர்.சி.பி. இராமசாமி அய்யர் அவர்கள் (1945)