உலக மனிதநேய மாண்பாளர் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 147-ஆம் ஆண்டு பிறந்த நாள் மாவட்டம் முழுதும் அனைத்து ஒன்றியங்களிலும் கிளைகள் தோறும் பெரியார் படத்திற்கும், சிலைகளுக்கும் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடி மகிழ வேண்டுமாய் கழகப் பொறுப்பாளர்களையும், தோழர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
17/09/2025 -அன்று காலை 8.00 மணிக்கு பையூரில் உள்ள பெரியார் சிலைக்கும்., காலை 9.00 மணிக்கு காவேரிப்பட்டணத்தில் உள்ள பெரியார் சிலைக்கும், கிருட்டினகிரி பெரியார் மய்யத்திலுள்ள பெரியார் சிலைக்கு காலை10.00 மணிக்கும் மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. எனவே கழகப் பொறுப்பாளர்களும் தோழர்களும் திரளாக கலந்துக்கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்: கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம்.
– – – – –
கன்னியாகுமரி மாவட்டத் கழகத் தோழர்களுக்கு ஓர் அறிவிப்பு
நாளை (17.9.2025) தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்தநாள். அன்று காலை 10 மணியளவில் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தந்தை பெரியாருடைய சிலைக்குத் திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் மாலையணிவித்து மரியாதை செய்யவிருக்கிறோம். அதனைத் தொடர்ந்து கழகக் கொடியேற்றுதல், இனிப்புகள் வழங்கல் அடுத்தடுத்த ஊர்களில் உள்ள பெரியாருடைய சிலைகளுக்கு மாலை அணிவிப்பு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க தோழர்கள் அனைவரும் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
விழா நடைபெறும் விபரம்
நேரம்: 8.30 மணி வடசேரி, 9.30 மணி ஒழுகினசேரி, 10.30: இராமபுரம் ஊராட்சி இலட்சுமிபுரம், 11.00 மணி வெள்ளமடம் கிறிஸ்துநகர், 11.30 மணி ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், 12.மணி தடிக்காரங்கோணம், 12.30 மணி கலிங்கராஜபுரம் களியக்காவிளை மற்றும் குமரிமாவட்டம் முழுவதும்