திருப்பதி, செப்.16 திருப்பதியில் காணாமல் போனவர்களை விரைவில் கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுடன் அதன் தலைவர் அனில் குமார் ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘திருப்பதிக்கு வரும் பக்தர்களை முகபாவங்களை வைத்தே அவர்கள் குழப்பத்தில் உள்ளனர் என்று காட்டும் ஏஅய் தொழில் நுட்பமான ‘‘பேசியல் ரிககனைசேன்’’ முறையில் அடையாளம் காணும் முறை அமல்படுத்தப்படும். இது தொடர்பாக எல்அன்ட்டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும்’’ என்றார்.
குறிப்பாக ஆல்ப்ஸ் இமயமலை, ஆண்டிஸ் போன்ற பெருமலைத்தொடர்களில் சாகசம் செய்யும் குழுக்களில் காணாமல் போனால் தனித்து விடப்பட்டவர்களின் உணர்வுகளை ஏஅய் தொழில் நுட்பம் பொருத்திய கண்காணிப்பு பறக்கும் காமிரா கண்டறிந்துவிடும், இதை 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரியா நிறுவனம் ஒன்று கண்டறிந்தது.
இதன் மூலம் உலகம் எங்கும் உள்ள பல்வேறு இடங்களில் காணாமல் போன பல ஆயிரம் நபர்கள் தகுந்த நேரத்தில் கண்டறியப்பட்டு காப்பாற்றி குடும்பத்தோடு இணைந்துள்ளனர், தற்போது திருப்பதி கடவுளை நம்பாமல் செயற்கை நுண்ணறிவை நம்பி களமிறங்கி உள்ளது தேவஸ்தான நிறுவனம்.