தேர்வு
சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு நேற்று (28.5.2023) நடந்தது. இந்தியா முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் எழுதினர். தமிழ்நாட்டில் 56 நகரங்களில் நடந்த தேர்வில் 50,000 பேர் பங்கேற்றனர்.
பால்…
வேறு பால் நிறுவனங்களை கண்டு யாரும் அச்சப்படவில்லை. பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொது மக்கள் எந்த சலசலப்புகளுக்கும் அஞ்ச வேண் டாம் என்று பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்.
வெயில்…
கோடை வெயிலின் தொடர்ச்சியாக நேற்று சென்னை விமான நிலையத்தில் 108 டிகிரி, திருத்தணியில் 106 டிகிரி என வெயில் கொளுத்தியது. பிற மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் திருப்பூரில் ஆலங்கட்டி மழை பெய்தது.
மனநலம்
தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கான ‘மீண்டும் இல்லம் திட்டம்‘ விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவகாசம்…
இளநிலை பொறியியல் கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள், தாங்கள் விரும்பும் படிப்பு படிக்க விண்ணப் பிக்க இன்னும் ஒரு வார காலமே அவகாசம் உள்ளது என அதிகாரிகள் தகவல்.