புதுடில்லி, செப்.14 உத்தரப் பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (ஏஎம்யு) பெரை மாற்றக் கோரி மீண்டும் பிரச்சினை கிளம்பியுள்ளது. இந்நிலையில், கேபினேட் அமைச்சர் தாக்கூர் ரகுராஜ் சிங், இப்பல்கலைகழகத்தின்பெயரை ஹரிகர் பல்கலைக்கழகம் எனமாற்ற வலியுறுத்தி உள்ளார்.
உ.பி.யின்மீரட்டில் 1857-இல் நடைபெற்ற சிப்பாய்கலவரத்தின் தாக்கமாக உருவானது ஆங்கிலோ முகம்மதன் ஓரியண்டல் கல்லூரி. 1875-இல் சர் சையத்அகமது கான் என்பவரால் நிறுவப்பட்ட இக்கல்லூரி தற்போது அலிகர் முஸ்லிம் பல்கலை கழகமாக உருவெடுத்துள்ளது. ஒன்றிய அரசின் அந்தஸ்தையும் இந்த பழம் பெரும் பல்கலை கழகம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூக சீர்திருத்தத் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை செய்து வருகிறது.இந்து மாணவர்களை விட முஸ்லிம்கள் அதிகமாகப் பயில்வதால் இது சிறுபான்மை அடையாளத்துடன் இணைத்து பார்க்கப்படுகிறது. இதனால், அப்பல்கலை கழகத்தின் மீதுஅவ்வப்போது சர்ச்சைகளும் எழுவது உண்டு. தற்போது இதில் உள்ள முஸ்லிம் எனும் பெயரை மாற்றுவதுகுறித்த விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இது குறித்து உ.பி.யின் கேபினேட் அமைச்சரான ரகுராஜ்சிங் அலிகரில் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ’அலிகர் முஸ்லிம் பல்கலை கழகத்தின் நிலம் இந்திய அரசிற்குச் சொந்தமானது.
ஒன்றிய அரசின் நிதி இந்தப் பல்கலைக் கழகத்திற்காகச் செலவிடப்படுகிறது. எனவே, அதை எந்த ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது வகுப்பினரின்அடையாளத்துடனும் தொடர்புபடுத்த முடியாது. எனவே, அதன் பெயரை மாற்ற வேண்டும். இப்பல்கலையில் ஒரு குறிப்பிட்ட வகுப்பு மட்டுமே அங்கீகரிக்கப்படுகிறது, அதை பொறுத்துக்கொள்ள முடியாது. அலிகரின் மண் போலே பாபாவுடனும் ஹரிதாஸுடனும் தொடர்புடையது.
எனவே, பல்கலைக்கழகத்தின் பெயரை ’ஹரிகர் பல்கலைக்கழகம்’ என்று மாற்ற வேண்டும். இதுபோல், அலிகர் நகரையும், ‘ஹரிகர்’ எனப் பெயரைமாற்றக் கோரி பாஜக உள்ளிட்ட இந்துத்துவாவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில்சுமார் 40,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.இதில், 3,500 பேராசிரியர்களும், 5,000 அலுவலர்களும் பணியாற்றுகின்றனர். இதில், பள்ளிகள், ஆண், பெண்களுக்கான அய்டிஅய், பாலிடெக்னிக், மகளிர் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளும் அமைந் துள்ளன. இதன் மீதான சிறுபான்மை அந்தஸ்து உபி. அலகாபாத் நீதிமன்ற வழக்கால் நீக்கப்பட்டது. அதன் மேல் முறையீடுவழக்கு உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கூக்குரல் மதவெறியைத் தூபமிடும் வேலை என்று எதிர்ப்பு எழுந்துள்ளது.