29.5.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை பாட்னாவில் ஜூன் 12ஆம் தேதி நடத்த பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் முடிவு.
👉சாவர்க்கார் பிறந்த நாளை மோடி உள்ளிட்ட அமைச் சர்கள் நாடாளுமன்ற மண்டபத்தில் கொண்டாடினர்.
👉 நாடாளுமன்ற திறப்பு விழா அல்ல; மோடி தனக்குத் தானே நடத்திக் கொண்ட முடிசூட்டு விழா என எதிர்க் கட்சிகள் கண்டனம்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
👉 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரை நடத்த வாய்ப்பில்லை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉முடிசூட்டு விழா முடிந்துவிட்டது, கொடுங்கோல் மன்னன் மக்களின் குரலை நசுக்குகிறான் என டில்லியில் போராடும் மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் கைது செய்தது குறித்து ராகுல் மோடி அரசை சாடல்.
தி இந்து:
👉 புதிய நாடாளுமன்றத்தில் ‘அகண்ட் பாரத்’ சுவரோ வியம் குறித்து டுவிட்டரில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதிவு. இது ஆர்.எஸ்.எஸ்.-ன் “கலாச்சார கருத்தாக்கம்” என்று வர்ணிக்கப்படும் அகண்ட பாரதத்திற்கான தீர்மானத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதாக பலர் விமர்சனம்.
தி டெலிகிராப்:
👉 புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர், மற்றும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சி களையும் காணவில்லை, இது கிட்டத்தட்ட ஒரு நபர் நிகழ்ச்சியாக மாற்றப்பட்டது, , மாநிலங்களவை தலைவர் விழாவில் பங்கு பெற வாய்ப்பு அளிக்காதது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான அடி.
– குடந்தை கருணா