மனீலா, செப். 13- பிலிப்பைன்ஸில் அரசாங்க ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் பல்கலைக் கழகங்களிலிருந்து வெளி நடப்பு செய்துள்ளனர்.
போராட்டங்களின் முக்கிய காரணங்களாகப் கூறப்படுவதாவது:
வரவுசெலவுத் திட்ட நிதியை குறைத்தது. பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்கள் தடைபட்டுள்ளமை. இந்த போராட்டங்களில் சில பல்கலைக்கழக ஊழியர்களும் ஆர்வலர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
ஊழல் தொடர்பான முக்கிய நிகழ்வுகள்: வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளில் இரண்டு செனட்டர்களும், சுமார் 17 மக்களவை உறுப்பினர்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, பொதுப்பணித் துறைச் செயலாளர் தனது பதவிலிருந்து விலகியுள்ளார்.
அதிபரின் நடவடிக்கை
பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர், உள்கட்டமைப்புத் திட்டங்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிய ஒரு சுயேட்சை விசாரணைக் குழுவை அமைத்துள்ளார். மேலும், அடுத்த ஆண்டுக்கான நிதி உதவியை நிறுத்தி வைப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.