லண்டன், செப். 13- பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் தொடர்பாக அமெரிக்க யூடியூபர் வெளியிட்ட வீடியோ ஒன்று பேசு பொருளாகியுள்ளது.
அதாவது அங்குப் பிரிட்டிஷ் நபர் யாரையுமே தன்னால் பார்க்க முடியவில்லை என்றும் இந்தியர்களே எல்லா பக்கமும் இருப்பதாக அவர் கூறிய கருத்துகள் சர்ச்சை யாகியுள்ளது. அவர் இன வெறி கருத்துகளைக் கூறியுள்ளதாகப் பலரும் அவரை சாடி வரு கிறார்கள்.
படிப்பு மற்றும் வேலை வாய்ப்பிற்காக இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளுக்கும் செல்கிறார்கள். குறிப் பாகப் பிரிட்டனில் அதி களவில் இந்தியர்கள் இருக் கிறார்கள். இதுபோல வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் பல நேரங்களில் இன பாகுபாட்டையும் எதிர் கொள்ள நேரிடுகிறது. அப்படி தான் அமெரிக்க யூடியூபர் ஒருவர் இன வெறி கருத்துகளைக் கூறி யிருக்கிறார்.
அதாவது லண்டனில் இருக்கும் ஹீத்ரோ விமான நிலையத்தில் இந்திய வம் சாவளி ஊழியர்களே அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் இது தனக்கு ஆச்சரியத்தைக் கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான ஹீத்ரோவில் தான் சில மணி நேரம் தங்க நேர்ந்ததாகவும் அங்கு ஒரு பிரிட்டிஷ் நபர்கூட வேலை செய்வதை தன்னால் பார்க்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். “இம்மிகிரேட்புல்” என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.