பேராவூரணி, செப். 13- பேராவூரணி தந்தை பெரியார் படிப்பகத்தில் நேற்று (12.9.2025) மால 6 மணிக்கு கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம் தலைமையிலும் மாவட்ட கழக காப்பாளர் அரு.நல்லதம்பி முன்னிலையிலும் நடைபெற்றது.
மாவட்ட துணை செயலாளர் சோம .நீலகண்டன் கடவுள் மறுப்பு கூறிட , பேராவூரணி நகர தலைவர் சி.சந்திரமோகன் வரவேற்புரை ஆற்றினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்தநாள் விழாவான சமூக நீதி நாளை கழகத் தோழர்கள் புத்தாடை உடுத்தி, பெரியார் உருவப் படத்தை வீடுகளில் அலங்கரித்து வைத்து, மாலை அணிவித்து , இனிப்புகள் வழங்கி கழகத்தின் இலட்சிய கொடியினை உயர்த்தி வைப்பது என இக்கூட்டம் ஒருமனமாக முடிவு செய்கின்றது.
விடுதலை சந்தா புதிதாக சேர்ப்பது , பழைய சந்தாக்களை புதுப்பிப்பது எனவும், உலகம் பெரியார் மயம் – பெரியார் உலக மயம் என்ற இலக்குடன் செயல்படும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் செயலில் உதித்த திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம் பணிக்கு நமது பேராவூரணி – சேது பாவாசத்திரம் ஒன்றியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை திரட்டி கொடுப்பது எனவும் இக்கூட்டம் முடிவு செய்கின்றது.
கிளைக் கழகம் தோறும் பொதுக்கூட்டம்
தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி கிளைக் கழகம் தோறும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தோழர்கள் ஒத்துழைப்புக் கொடுப்பது எனக் இக்கூட்டம் முடிவு செய்கின்றது. என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து கூட்டத்தில் அறந்தாங்கி கழக மாவட்ட துணைத் தலைவர் ப.மகாராஜா, பேராவூரணி ஒன்றிய பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் கனக .இராமச்சந்திரன், மேனாள் ஒன்றிய கழக செயலாளர் பொ. மதியழகன், சேது ஒன்றிய கழக செயலாளர் ஆ.சண்முகவேல், மாவட்டக் கழக இளைஞரணி செயலாளர் சு.வசி, பேராவூரணி ஒன்றிய தலைவர் மு.தமிழ்செல்வம், சேது பாவா சத்திரம் ஒன்றிய தலைவர் சி.செகநாதன், கழகப் பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா. நீலகண்டன் ஆகியோர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது பெரியார் உலகம் நிதி திரட்டுவது, விடுதலை சந்தா சேர்ப்பு பணியை செய்வது, கிராமங்கள் தோறும் கூட்டம் நடத்துவது குறித்து உரையாற்றினர்.
சேது ஒன்றிய கழக இளைஞரணி பொறுப்பாளர் பொ.சந்தோஷ் குமார் நன்றி கூறினார்.