அப்பேன், செப். 13- அல்பேனியா உலகிலேயே முதல் நாடாக, தனது அமைச்சரவையில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு அமைச்சரை பணியமர்த்தியுள்ளது. டீல்லா (Diella) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏய் அமைச்சருக்கு, பொது கொள்முதல்களை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
டீல்லா, பொது சேவைகளைப் பயன்படுத் துவதற்கு மக்களுக்கு உதவுவதுடன், பொது ஏலக்குத்தகைகளில் நடக்கும் ஊழலை ஒழிக்க உதவும் என்று அல்பேனிய பிரதமர் எடி ராமா நம்பிக்கை தெரிவித்துள்ளார். படிப்படியாக, ஏலக்குத் தகைகளில் வெற்றி பெறுபவர்களைத் தேர்ந் தெடுக்கும் பொறுப்பு முழுமையாக டீல்லாவிடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் கூறினார்.
ஏனெனில், டீல்லா ஏலங்களை எந்தவித பக்கச்சார்பும் இல்லாமல் நடுநிலையுடன் ஆராயும் என்று பிரதமர் குறிப்பிட் டார். பாரம்பரிய அல் பேனிய உடையில் வடிவமைக்கப்பட்ட டீல்லாவை, அரசின் இ-அல்பனியா தளத்தில் காணலாம்.
இருப்பினும், இந்த நடவடிக்கையால் ஊழல் குறையுமா என்பதில் சிலருக்கு சந்தேகம் உள்ளது. “அல் பேனியாவில் டீல்லாவும் ஊழல் செய்யத் தொடங்கி விடும்” என்று ஒரு இணையவாசி கருத்துத் தெரிவித்ததாக தி கார்டியன் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.