லக்னோ, செப்.13 நாடாளுமன்றம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் ஆளும் பா.ஜ.க. அரசு வாக்குத் திருட்டில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பல தேர்தல்களில் வெற்றி பெற்றது என காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் மேனாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலை வருமான அகிலேஷ் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நம் நாட்டில் நடக்கும் பல தேர்தல்களில் வாக்குத் திருட்டு நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர், அயோத்யா உள்ளிட்ட பல இடங்களில் நடந்த தேர்தல்களில், வாக்கா ளர்கள், தேர்தல் அதிகாரிகள் மிரட்டப்பட்டனர்.
இன்று சமூக வலைதளங்களின் காலம். இளைஞர்கள் அவற்றை அதிகம் பயன்படுத்து கின்றனர். நம் அண்டை நாடுகளில் அரசுக்கு எதிரான புரட்சிகளை நம்மால் பார்க்க முடிகிறது.
வாக்குத் திருட்டை தடுக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தேர்தல் ஆணையத்தின் தலையாய கடமை.
வாக்குத் திருட்டை தடுக்காவிட்டால், இன்று நம் அண்டை நாடுகளில் அரங்கேறும் அவல நிலை, நம் நாட்டிலும் நடக்க வாய்ப்புள்ளது.
அங்கு அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்குத் திருட்டை தடுக்காவிட்டால், நம் நாட்டிலும் மக்கள் வீதிகளில் இறங்கும் நிலை வந்துவிடும் என தெரிவித்தார்.