தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டங்கள்

6 Min Read

செங்கல்பட்டு – மறைமலைநகரில் அக்டோபர் 4அன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர். அதன் விவரம் வருமாறு:-

பாரூர் கீழ்குப்பம்

கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப் பட்டணம் ஒன்றியம் பாரூர் கீழ்குப்பம் கிராமத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – மாநில மாநாடு மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க திராவிடர் கழகப் பொதுக் கூட்டம்  சிறப்பான ஏற்பாடுகளுடன் மிகுந்த எழுச்சியுடன் கீழ்குப்பத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் துணைத் தலைவர் மு.வேடி யப்பன் தலைமை வகித்தார். மாவட்ட கழக மேனாள் இணைச் செயலாளர் க.பழனிசாமி அனைவரையும் வரவேற்றார்.

கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி தொடக்கவு ரையாற்றினார்.

திராவிடர் கழகம்

நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலை வர் வ. ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் இல.ஆறுமுகம், ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன், கீழ்குப்பம் திமுக கிளை செயலாளர் ப.தமிழரசு. கீழ்குப்பம் கிளை கழக நிர்வாகிகள் பொ.கிருஷ்ணமூர்த்தி, நா.அகிலன், துரை (எ) சண்முகம், கோ.சின்னசாமி (எ) பத்தப்பன் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

பொதுக் கூட்டத்தில் கழக பேச்சாளர் கோவை க.வீரமணி நீதிகட்சி தொடக்கம் முதல் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்கு ஆற்றிய, ஆற்றிவரும் அரும் பெரும்பணிகளையும், திராவிட மாடல் ஆட்சியின் சாதனையின் தொடர்ச்சியை விளக்கியும் சிறப்புரையாற்றினார்.

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் ஊமை. செயராமன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், மேனாள் மண்டல தலைவர் பழ.வெங்கடாசலம், மாநில இளைஞரணி துணைச் செயலா ளர் மா.செல்லதுரை, பெங்களூர் ஸ்ரோ நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் திருஞானம், திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மா.பாண்டியன், மாவட்ட கழக மகளிர் பாசறை தலைவர் ம.சிவசக்தி ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் திமுக மாவட்ட மருத்துவர் அணி துணைத் தலைவர் மு.மனோகரன், மாவட்ட வழக்குரைஞர் அணி துணை அமைப்பாளர் த.பிரபாகரன், பால் கூட்டுறவு சங்க மேனாள் தலைவர் மு.பெருமாள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில்  சட்டக் கல்லூரி மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் ச.மணிமொழி, மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டினன், மாவட்ட ப.க.செயலாளர் க.வெங்கடேசன், மாவட்ட ப.க. துணைச் செயலாளர் மா.சிவசங்கர், மாவட்ட தொழிலாளரணி தலைவர் சி.வெங் கடாசலம், பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன்,

திராவிடர் கழகம்

ஊற்றங்கரை ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமி, ஒன்றியச் செயலாளர் செ.சிவராஜ், மாவட்ட ப.க.துணைத் தலைவர் ப.செயக்குமார், எம்ஆர்ஆர்சி.மாவட்ட தலைவர் ப. இளைய ராசா, அரசம்பட்டி ப.க. ஜோதிபாசு, தீ.சக்திவேல், மத்தூர் ஒன்றியத் தலைவர் சா.தனஞ்செயன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு, பர்கூர் ஒன்றியச் செயலாளர் ப. பிரதாப், அகரம் நா.சதீஷ்குமார், பொடார் பு.கணேசன், பையூர் செ.வீரபாண்டி, எம்.ரூபிகசிறீ உள்பட கழகத்தோழர்கள் கலந்துக்கொண்டனர். கீழ்குப்பம் கிராமத்தில் முதல் தலைமுறையாக திராவிடர் கழகத்தோழர்களின் பிள்ளைகள் பட்டமேற்படிப்பு மேற்கொண்டு படித்தும், பணியிலும் இருந்து வருகின்றவர்கள்.

மரு.கி.பிரதீப்குமார் வேலூர் அரசு மருத்துவராகவும், ஜீ. அதியமான், பு.வே.தீனு (எ) மணியம்மை மருத்துவராகவும் பயன்று வருகின்றனர்., கி.பிரவின்குமார், அ.அபூர்வா பொறியாளராகவும்,            த.பிராபாகரன், ப. ஏங்கல்ஸ் வழக்குரைஞர் களாகவும், மற்றும் ப.லெனின், ஜீ. ஆதிரை, கு. ஒவியா, கு. இனியன் பட்டமேற்படிப்பை முடித்தும் பயன்றும் வருபவர்களையும் திராவிடர் கழக தலைமை கழகம் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. செயராமன் பயனாடை அணிவித்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். நிறைவாக மேனாள் மாவட்ட இளை ஞரணி செயலாளர் இல.குமார் நன்றி கூறினார்.

உடுமலை

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு குறித்து 30.8.2025 அன்று மாலை உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்திற்கு முன்பு நடைபெற்றது.

தாராபுரம் கழக மாவட்ட தலைவர் க. கிருஷ்ணன் தலைமையேற்றார். மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் ஜெ. தம்பி பிரபாகரன் வரவேற்பு உரையாற்றினார் மாவட்ட அமைப்பாளர் புள்ளியான், நிகழ்வின் தொடக்க உரையாக திராவிட முன்னேற்ற கழகத்தின் செயலாளர் சி. வேலுச்சாமி உரையாற்றினர். நகரத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் செந்தில் குமார், பொதுக்குழு உறுப்பினர். UNP குமார் மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் பா விக்ரம் மாநாட்டை வாழ்த்திப் பேசினார்.

மாவட்டத் துணைத் தலைவர் ஆறுமுகம், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் தங்கவேல், உடுமலை ஒன்றிய தலைவர் பெரியார் பித்தன், உடுமலை நகரத் தலைவர் ஆசிரியர் கலையரசன், நகரச் செயலாளர் முருகேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தமிழ் நிலவன், இளைஞர் அணி வினோத், கோடீஸ்வரன், மாவட்ட பக தலைவர் வெங்கடாசலம், ப க செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் மயில்சாமி அர்ஜுனன், கண்ணன், திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். திராவிட இயக்க நூற்றாண்டை குறித்தும் திராவிட இயக்கத்தின் பணிகள் குறித்தும் கழகப் பேச்சாளர் காஞ்சி கதிரவன் உரையாற்றினார்.

 மத்தூர்

கிருட்டினகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் மத்தூர் பேருந்து நிலையத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு   விளக்க கழகப் பொதுக் கூட்டம் 07/09/2025 அன்று மாலை 6.00 மணியளவில் மிகுந்த எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் சா. தனஞ்செயன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் வி.திருமாறன் அனைவரையும் வரவேற்றார்.

கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன்,மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மாவட்ட தொழிலாளரணி தலைவர் சி.வெங்கடாசலம், மாவட்ட மகளிரணி தலைவர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மா.சிவசக்தி ஆகியோர் முன்னிலை வகித்துப்பேசினர்.

மாவட்ட துணைத் தலைவர் வ.ஆறுமுகம் கூட்டத்தை ஒருங்கிணைத்து இணைப்புரை வழங்கினார்.

பொதுக் கூட்டத்தில் கழகச் சொற்பொழிவாளர் முனைவர் காஞ்சி பா.கதிரவன்  சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் தொடர்ச்சியாக திமுக நாட்டு மக்க ளுக்கு கல்வி, வேலைவாய்ப்புகள், இடஒதுக்கீடு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட  மக்களுக்கு அனைத்தும் அனைவருக்கும் என்ற உயர்ந்த சிந்தனையுடன் சமத்துவ உரிமைகளை பெற ஆற்றிய ஆற்றிவரும் அரும்பெரும் பணிகளையும், ஸநாதன சாஸ்திரகுப்பைகளையும் மூடநம்பிக்கையை தகர்த்தெறிந்து பகுத்தறிவு சுயமரியாதை சிந்தனையை ஊட்டி வளர்த்தது திராவிடர் கழகம், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள். தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும், அரசின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை விளக்கி சிறப்புரையாற்றினார்.

மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், பழ.வெங்கடாசலம்  ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில் மாநில மகளிரணி துணைச்செயலாளர் மு. இந்திராகாந்தி, மாவட்ட ப.க.செயலாளர் க.வெங்கடேசன்,  காவேரிப்பட்டணம் ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன், மாவட்ட ப.க.துணைத் தலைவர் மு.வேடியப்பன்,  மாவட்ட தொழிலாளரணி செயலாளர் மா.சின்ராஜ், மாவட்ட மகளிரணி தலைவர் சி.முரு கம்மாள், ஒன்றிய ப.க.தலைவர் மு.செய ரட்சகன், ஊற்றங்கரை ஒன்றிய துணைத் தலைவர் காரப்பட்டு ப.இரமேசு, ஒன்றிய இளைஞரணி செயலாளர் செ. இராமசெயம், போச்சம்பள்ளி கா.ஞானசேகரன், மாவட்ட மாணவர் கழக  ச.அகரன், ஊற்றங்கரை  ஒன்றியச் செயலா ளர் செ.சிவராஜ்,  கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் த.மாது, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு, மு.புலிக்கொடி, மத்தூர் நகர செயலாளர் பொன்.விசுவநாதன், எம்.ரூபிகாசிறீ, ஞா. சுகன் உள்பட கழகத்தோழர்கள் கலந்துகொண்டனர். நிறைவாக மாவட்ட இளைஞரணி செயலாளர் நா. சிலம்பரசன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *