அய்.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டி குஜராத் அணிக்கும் சென்னை அணிக்குமா நடக்க வேண்டும்?
நடந்ததைப் பார்த்தால் அது ஆரியர் – திராவிடர் போராட்டமாகவே களம் கனல் ஏறியது (கடுமழை கொஞ்சம் தணித்திருக்கலாம்).
ஆட்டம் நடந்த அகமதாபாத் மைதானத் துக்குப் பெயர் நரேந்திர மோடி ஸ்டேடியம் – கேட்கவும் வேண்டுமா!
பி.சி.அய். செயலாளர் யார் தெரியுமா? அமித்ஷாவின் அருமை மகன் – ஜெய் ஷாவும் ஆட்டத்தை ரசித்துக் கொண் டிருந்தார். மூன்று பந்தில் 10 ரன் சென்னை அடிக்க வாய்ப்பில்லை குஜராத்துதான் ஜெயிக்கப் போகிறது என்ற குஷியில் பொறுப்பான பதவியில் உள்ளவர் நெஞ்சைத் தட்டிக் காட்டி குதித்தார்.
அந்தோ பரிதாபம்! குஜராத் ஆசையில் மண் விழுந்தது – சென்னை அணி வீரர் 10 ரன்களை அடித்து வெற்றிக் கோப்பையை சென்னை அணியின் தலைவர் தோனி கையில் கொடுத்ததுதான் தாமதம்! மக்கள் வெள்ளம் கரை புரண்டு ஆடி மகிழ்ந்தது. கிரிக்கெட்டில்கூட ஆரிய திராவிடப் போராட்டம் என்ற ரீதியில் தான் ஆட்டம் நடந்தது. கடைசியில் திராவிடமே வென்றது. ஆனால் இன்று வெளிவந்த தினமலர் குஜராத் ஜெயித்ததுபோல செய்தி வெளியிட்டது – வெட்கக் கேடு!