திருவாரூர் செப்.11- திருவாரூர் மாவட்டத்தில், முதல்வரின் ‘தாயுமானவர் திட்டம்’ செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கா. சித்ரா அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்
படும்.
ரேசன் பொருட்கள் விநியோகம்: இந்தத் திட்டத்தின்படி, செப்டம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள், செப்டம்பர் 13, 14, மற்றும் 15 ஆகிய தேதிகளில் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கப்
படும்.