நியூயார்க் செப். 11- உலகப் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி, ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ப்ளூம்பெர்க் வெளியிட்ட தகவலின்படி, அவரது சொத்து மதிப்பு ஒரே நாளில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. ஆரக்கிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகரித்ததே, லேரி எலிசனின் சொத்து மதிப்பு உயர்வுக்கு முக்கியக் காரணம். நிறுவனத்தின் மொத்தப் பங்குகளில் 41% பங்குகளை தன்வசம் வைத்துள்ள எலிசனின் சொத்து மதிப்பு தற்போது $393 பில்லியன் ஆக உள்ளது.
இதன்மூலம், $384 பில்லியன் சொத்து மதிப்பு கொண்ட எலான் மஸ்க்கை அவர் முந்தியுள்ளார்.
- லேரி எலிசன் (ஆரக்கிள்) – $393 பில்லியன் 2. எலான் மஸ்க் (டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ்) – $384 பில்லியன் 3. மார்க் ஸுக்கர்பெர்க் (மெட்டா) 4. ஜெஃப் பெஸோஸ் (அமேசான்)