மேட்டூர், செப். 11- மேட்டூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 7.9.2025 அன்று காலை 10.30 மணிக்கு மேட்டூர் தந்தை பெரியார் படிப்பகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கா.நாபாலு தலைமை தாங்கினார். மாவட்ட காப்பாளர் பழனி.புள்ளையண்ணன் சிறப்புரை ஆற்றினார்.
பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் கோவி.அன்புமதி, அ.ப.ராஜேந்திரன், இரா.கலையரசன், மு.நேரு, கோ.சோமசுந்தரம், சோ.அமராவதி, சி.சீனிவாசன், கோ.ராதாகிருட்டினன், ஆர்.எம்.சண்முகசுந்தரம், கோ.குமார், ப.சி.நடராஜன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு இயக்க வளர்ச்சி பணிக்கு கருத்துரை வழங்கினர். மேலும் கீழ்க்கண்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
17.09.2025 அன்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை குடும்ப விழாவாக சிறப்பாக கொண்டாடுவது, 4.10.2025 அன்று செங்கல்பட்டில் நடைபெறும் சுயமரியாதை நூற்றாண்டு விழா மாநாட்டில் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்வது, உலக புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைத்த திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பாராட்டுதலையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க பெரியார் காப்பு அணிக்கு 5 தோழர்களை அனுப்பி வைப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியில் கோ.ராதாகிருட்டினன் நன்றி கூறினார்.