பற்றி எரியும் நாடாளுமன்றம் ராணுவ ஆட்சியை நோக்கி நேபாளம்

1 Min Read

காத்மாண்டு, செப். 10- நேபாள தலைநகர் காத்மாண்டுவில் பல கட்டடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் நிலவி வருகிறது.

கண்டிப்பூரில் உள்ள தொலைக்காட்சி அலுவலக கட்டடத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். நேபா ளத்தில் பிரதமர், அமைச்சர்கள் இல்லம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அலுவலங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்த நிலையில், நாடாளுமன்ற கட் டடத்திற்கும் தீ வைக் கப்பட்டது. இந்த பரபரப்புகளுக்கிடையே பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதன் எதிரொலியாக நேபாளத்தில் மாணவர்கள், இளைஞர்கள் போராட் டத்தில் வன்முறை வெடித்ததால் ராணுவம் வரவழைக்கப்பட்டது. ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற உள்ளதாகவும், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேற இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இலங் கையை போன்றே நேபாளத்தில் புரட்சி வெடித்துள்ளது. 2022ல் இலங்கையில் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இலங்கையில் 2022 மார்ச்சில் தொடங்கிய மக்களின் போராட்டத்தை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறினார் கோத்தபய ராஜபக்ச. இலங்கையில் போராட் டத்தின்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே உள்ளிட்டோரின் வீடுகள் சூறையாடப்பட்டன.

விமான சேவை நிறுத்தம்

*இந்தியர்கள் நேபாளம் செல்வதை தவிர்க்க ஒன்றிய வெளி யுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுவதாக இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்கள் அறிவித் துள்ளன.

*நேபாளத்தில் பதற்றம் நிலவி வருவதால் இந்தியர்களுக்கு உதவி எண்களை அறிவித்தது இந்திய தூதரகம். அவசர உதவிக்கு +977 98086 02881, 98103 26134 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் வெளியுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *