கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 9.9.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.

* தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள், ஆளும் திமுக அரசு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்கிறது தலையங்கம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* வீரசைவ-லிங்காயத்துக்கள் இந்துக்கள் அல்ல, ‘மற்றவர்கள்’: கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் செப்டம்பர் 22 முதல் நடத்தப்படும் சமூகக் கல்வி ஆய்வு-2025 (ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு)-ல் “மற்றவர்கள்” என்ற பத்தியின் கீழ் மதத்தைக் குறிக்குமாறு அகில பாரத வீரசைவ மகாசபா அதன் சமூக உறுப்பினர்களான வீரசைவ-லிங்காயத்துகளைக் கேட்டுக் கொண்டது.

* மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக தனது சொந்த அரசாங்கத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வேன் என்று தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் சாகன் புஜ்பால் எச்சரிக்கை

* 25 இடங்கள் தேறாது: வரவிருக்கும் பீகார் சட்டமன்ற தேர்தலில்  நிதிஷ் குமார் தலைமையிலான ஜே.டி.(யு) 25 க்கும் மேற்பட்ட இடங்களை வென்றால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்கிறார் ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர்

தி டெலிகிராப்:

* இந்த ஆண்டும், ஓபிசி ஆராய்ச்சி மாணவர்களுக்கு நான்கு மாதங்களாக பெல்லோஷிப் நிதி வழங்கப்படவில்லை; NFOBC உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், உயிர் வாழ பணத்தை கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக டில்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜே.என்.யு. மாணவர்கள் புகார்.

* இன்று நடைபெறும் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ்., நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் பங்கேற்காது.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *