வாக்காளர் பட்டியலில் குடும்ப அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்கள் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 12-ஆவது ஆவணமாக ஆதாரை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதாரை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனை யடுத்து, ஆதாரை வாக்காளர் பட்டி யலில் சேர்ப்பதற்கான வழிமுறை வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.
‘தினக்கூலி’யின் மகன் இந்திய ராணுவ அதிகாரி..!
கல்விதான் உங்களை உயர்த்தும் என்பதற்கு சிறந்த உதாரணம்தான் சென்னை வியாசர்பாடி இளைஞர் வரப்பிரசாத். பெற்றோர் தினக் கூலிகள், ஆனாலும் கடின உழைப்பால் ராணுவ லெப்டினன் டாக மகன் உயர்ந்து நிற்கிறார். தற்போது, சென்னை அதிகாரிகளுக் கான பயிற்சி அகாடமி (OTA)-வில் பயிற்சியை நிறைவு செய் துள்ள அவர், விரைவில் ராணுவ அதிகாரியாக புதிய அத்தியாயத்தை தொடங்க வுள்ளார். கல்வியால் சாதித்த வரப்பிரசாத், பல இளைஞர் களின் உந்துதலுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளார்.