அறிவுச்சூன்யமே, உன் பெயர்தான் ‘குருமூர்த்தியா?’

3 Min Read

‘‘தமிழை அழிக்க தி.மு.க. நினைக்கிறது’’

குருமூர்த்தி, ஆசிரியர், ‘துக்ளக்’

என்று இன்று (9.9.2025) ‘இனமலர்’ நாளேட்டில், அவர் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து கீழே காணும் பெ(வெ)ட்டிச் செய்தியாக வெளியிட்டு,  ‘அறிவுக்கொழுந்து’ அய்யர்வாளின் அறிவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, ‘இனமலர்!’

‘‘திராவிடத்துக்கு எந்தவொரு மொழியும் கிடையாது. தி.மு.கவினர் திராவிடம், தமிழ் குறித்துப் பேசுகின்றனர். இவ்விரண்டுக்குமே தி.மு.க.வினர் உண்மையாக இல்லை. தி.மு.க. தமிழை அழிக்க நினைக்கிறது; இதுவரை தமிழுக்காக எதுவும் செய்யவில்லை. தி.மு.க. வந்தது முதல் தமிழகத்தில், அரசியல் கலாச்சாரமே மாறிவிட்டது. அக்கட்சியில், தரம் தாழ்ந்த பேச்சாளர்கள் உள்ளனர். அவர்களது ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. காங்., ஆட்சிக்கு முன் இந்தியாவில் இருந்த தேசியத்தை பா.ஜ. மீட்டெடுத்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அதை செய்யவில்லை. ஹிந்தி, ஹிந்து, ஹிந்துஸ்தான் ஆகிய மூன்றையும் முன்னெடுப்பதே பா.ஜ.,வின் உண்மையான நோக்கம்.’’

அட அறிவுச்சூன்யமே,

  1. திரவிடத்திற்கு எந்த ஒரு மொழியும் கிடையாதாம்! என்னே, அறியாமையின் உச்சம்! எப்படி, எதால் சிரிப்பதோ!

‘‘பண்டைத் தமிழும்,  தமிழில் மலர்ந்த

பண்ணிகர் தெலுங்கு, துளுமலை யாளம்

கண்டை நிகர்கன் னடமெனும் மொழிகள்

கமழக் கலைகள் சிறந்த நாடு!

வாழ்க வாழ்கவே, வாழ்க வாழ்கவே!

வளமார் எமது திராவிட நாடு!’’

என்ற புரட்சிக்கவிஞர் பாட்டை திரைப்படங்களில் கேட்டிருக்கிறாரா என்றுகூட தெரியவில்லை.

  1. செம்மொழித் தகுதியை ஒன்றிய அரசு ஆணை மூலம் 2004 இல் பெற்றுத் தந்ததே தி.மு.க.தான் – முத்தமிழறிஞர் கலைஞர்தான் (2004) என்பதையும், அதன் பிறகே அதற்காகத் திறந்த கதவிற்குப் பின்னால் ஏற்கெனவே ‘செத்தமொழி’ என்று மொழி அறிஞர்களால் ‘புகழ் பெற்ற’ வடமொழி சமஸ்கிருதத்திற்கு 2005 இல் செம்மொழித் தகுதி கிடைத்தது.
  2. ‘தமிழ் நீஷ பாைஷ, சமஸ்கிருதம் தேவபாைஷ’ என்று கூறி, பாமர பக்தி அடிமைகளை அதன்மூலம் இன்றளவும் நம்ப வைக்கும் பித்தலாட்டக்காரர்களே, (சந்தேகமிருந்தால்) உங்களது பழைய, பழைய பெரியவா, சின்னவா, ‘ஜெயிலுக்குப் போனவா’ எல்லோருமே சங்கர மடத்தில் பூஜை புனஸ்காரம் செய்த பிறகு, சமஸ்கிருதத்தைத் தவிர, ‘தமிழில்’ பேசமாட்டா; காரணம், நோக்கு தெரியாததா? தமிழ் நீஷப் பாைஷ என்பதால், குளித்துவிட்டு, சந்தியாவந்தன ஜெபதபம் எல்லாம் செய்த பின், நீஷ பாைஷயில் பேசினால், ‘தீட்டாயிடுத்து’ என்ற நிலை ஏற்படுமாம்!

இந்த ‘யோக்கிய சிகாமணிகளா’ தமிழ் இன உணர்வுக்கு வித்திட்டு, அதன் அடிக்கட்டுமானத்தைப் பாதுகாத்த திராவிடத்தைப்பற்றி இப்படிப் பேசிடுவது?

  1. 1920–களிலேயே திராவிடர் இயக்கம், தமிழ்ப் பல்கலைக் கழகம் தேவை என்று முன்னோடியாகக் கூறிய வரலாறு தெரியுமா, உங்களுக்கு?
  2. ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் பல கட்டமாக நடைபெற்று வருவதுதானே தமிழின் மீதான தாக்குதலைத் தடுத்து, தமிழைக் காக்கிறது!
  3. திராவிட இயக்கத்தால்தான் தமிழ் உணர்வும், தமிழ்நடையும் பெருகியது என்று ‘சிவாஜி’ என்ற கலை-இலக்கியச் சிற்றிதழை நீண்ட காலம் நடத்தி, பல படைப்பாளிகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த திரிலோக சீதாராம் என்ற பழைய பிரபலம், திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு எழுத்தாளர் சங்க மாநாட்டில் உரையாற்றியபோது, ‘‘இவர்கள் எங்கே, என்ன வேலை செய்து கொண்டிருந்தார்களோ?’’, அதனால் இந்தத் ‘தத்துப் பித்து’ தறுதலைத் தன உளறல்கள்!

உங்களது அரசியல் புரோக்கர் வேலையே படுதோல்வியோடு உலாவரும்போது, உங்களுக்குத் தெரியாத துறையில் ‘விஷய தானத்திற்கு’ (அவாள் பாைஷ)ப் பதில் விஷமதானத்தைச் செய்து – மூக்கறுபட்டு, மூலைக்குத் தள்ளப்பட்ட முக்காடுக்கு ஏன் இந்த விஷம வேலை?

பாவம், ‘துக்ளக்’, ‘சோ’ இராமசாமி இருந்த இடத்தின் மரியாதை இப்படி ஆடிக்காற்றில் ஆலாய்ப் பறப்பதா?

வெட்கம், வேதனை, அவாளுக்கு!

குறிப்பு: ‘நான் ஓர் அரசியல் புரோக்கர்தான்!’ என்று ‘துக்ளக்’ சோ சொன்னதும் உண்டு. அவருடைய புரோக்கர்தனம் தோல்வி என்பதை ஒப்புக்கொண்டவர் அவர். அந்தத் ‘தன்மை’கூட இவரிடம் ‘ஆப்சென்ட்’ (Absent).

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *