பெங்களூரு, செப்.8 மக்களவை எதிர்க்கட்சி தலை வரும் காங்கிரஸ் மூத்த தலை வருமான ராகுல் காந்தி அண் மையில் கடந்த 2024 மக்கள வைத் தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், 5.9.2025 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் களை இனி வாக்குச்சீட்டு முறை யில் நடத்த வேண்டும் என முதலமைச்சர் சித்தராமையா வலி யுறுத்தினார். இதற்கு அமைச் சர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இதுகுறித்து கருநாடக சட்ட அமைச்சர் எச்.கே.பாட்டீல் கூறுகையில், “தேர்தல்களின் மீதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில், வாக்குச்சீட்டுகளை மீண்டும் கொண்டுவர அமைச்சரவை முடிவெடுத்துள் ளது.
முதல்கட்டமாக உள்ளாட்சி நேர்தலை வாக்குச்சீட்டு முறை யில் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கவும், தேவைப்பட்டால் திருத்தவும் அங்கீகாரம் அளித்துள்ளோம்’’ என்றார்.
இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம் உள் ளாட்சித் தேர்தல்களை கருநாடக அமைச்சரவையின் பரிந்துரையின்படி வாக்குச் சீட்டு முறையில் நடத்த முடி வெடுத்துள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. இந்த முடிவுக்கு பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட் சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.