செந்துறை, செப். 8- அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் இருங்களாக்குறிச்சி கிராமத்தை சார்ந்த விசுவநாதனின் வாழ்விணையரும், மாநில ப.க அமைப்பாளர் தங்கசிவ மூர்த்தியின் மாமியாரும், ஆசிரியர் சிவசக்தி, வேளாண் அலுவலர் வேல்முருகன் ஆகியோரின் தாயாருமான தமிழரசி 27.8.2025 அன்று இயற்கை எய்தியதை முன்னிட்டு படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
6.9.2025 சனிக்கிழமை காலை 11 மணியளவில் இருங்களாக்குறிச்சி வேல்முருகன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையேற்க, மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் இரத்தின.இராமச்சந்திரன் காப்பாளர் சி.காமராஜ், மாவட்டத் துணைத் தலைவர் இரா திலீபன் மாவட்டத் துணைச் செயலாளர் பொன் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் அம்மையாரின் உருவப் படத்தை திறந்து வைத்தார்.
மாநில ப.க அமைப் பாளர் தங்க சிவமூர்த்தி அனைவரையும் வரவேற்று அறிமுக உரையாற்றினார். காப்பாளர்கள் சு. மணி வண்ணன், பெரம்பலூர் அக்ரி ஆறுமுகம், பகுத் தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வா. தமிழ் பிரபாகரன், கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் ஆகியோர் உரையாற்றியதற்கு பின்னர் தலைமைக்கழகப் பேச்சாளர் இராம. அன்பழகன் பண்பாட்டுத் தளத்தில் பார்ப்பனர்களின் சூழ்ச்சியை விளக்கி யும், தமிழர்கள் சுயமரியா தையோடு வாழ வேண் டியதன்அவசியம் குறித்தும் விளக்கி நினைவேந்தல் உரையாற்றினார்.
வேல்முருகன் நன்றி கூறினார். தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனை செல்வன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத் தார்.
நிகழ்ச்சியில் மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் திராவிடச் செல்வன், மாவட்ட தொழிலாளரணி பொறுப்பாளர்கள் வெ. இளவரசன் மா கருணாநிதி, மாவட்ட விவசாய அணி பொறுப் பாளர்கள் மா சங்கர் ஆ இளவழகன், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் மு ராஜா, ஒன்றிய பொறுப்பாளர்கள் செந்துறை மு.முத்தமிழ் செல்வன்ராசா, செல்வகு மார் சுப்பராயன், ஆண்டிமடம் தியாக.முருகன், இரா.தமிழரசன், ஜெயங்கொண்டம் அ.சேக்கிழார், ஆ.ஜெய ராமன், தா.பழூர் பி. வெங்கடாசலம், சி.தமிழ் சேகரன், ஆசிரியர் இரா.இராஜேந்திரன் அரியலூர் சி. சிவக்கொழுந்து, த.செந் தில், ஆட்டோ தர்மா, பொன்பரப்பி வை. சுந்தரவடிவேல், உள்ளிட்ட கழகத் தோழர்களும் உறவினர்களும் நண்பர்களும் பங்கேற்றனர்.