திருச்சி, செப். 7– பெரியார் மணியம்மை பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 04.09.2025 அன்று காலை 9.30 மணியளவில் மொழி வாழ்த்துடன் தொடங்கப்பட்ட ஆசிரியர் தின விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியை சு.பாக்கியலெட்சுமி தலைமை ஏற்க, பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் முன்னிலையில் ஆசிரியர் தின விழா கொண் டாடப்பட்டது. 12ஆம் வகுப்பு ஆ பிரிவைச் சேர்ந்த மாணவியர் தலைவி ஷிபானா பாத்திமா விழாவில் குழுமியிருந்த அனை வரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.
11ஆம் வகுப்பு மாணவி அ. சனா ஹமிதா தனது உரையில் மரத்தின் வேர் போல இருப்பவர் தலைமையாசிரியை. அதில் கிளைகளாக இருப்பவர்கள் ஆசிரியர்கள். அதில் இலைகளாக இருப்பவர்கள் நாங்கள் என உரையைத் தொடங்கி. ஏணி படிகளாய் நின்று எங்களின் ஒவ்வொரு வெற்றிக்கும் உறு துணையாக இருப்பவர்கள் எம் பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியப்பெருமக்கள் எனக்கூறி பள்ளியின் அனைத்து மாணவிகளின் சார்பாக சிறப்பானதொரு உரை நிகழ்த்தி நிறைவு செய்தார்.
11ஆம் வகுப்பு மாணவி MU. காருண்யா பறக்கும் பட்டமல்ல நம் ஆசிரியர்கள் நம்மை உயர உயர பறக்க வைக்கும் நூல் ஆகிறார்கள் என்ற நீண்ட தொரு கவிதையை வடித்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். பின்பு ஆசிரியர்களை மகிழ்விக்கும் விதமாக மாணவியர்கள் பல கலை நிகழ்ச்சியை நிகழ்த்தினர். அதனை தொடர்ந்து ஆசிரியர் களை உற்சாகப்படுத்தும் வித மாக குழு விளையாட்டு, பலூன் ஊதும் போட்டி நடை பெற்றது. ஆசிரியர்கள் மிக ஆவலுடன் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு தலைமை யாசிரியர் பதக்கம் வழங்கி வாழ்த் துகளை தெரிவித்து. அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்து சிறப்புரையாற்றினார்.
இறுதியாக 11ஆம் வகுப்பு மாணவி எம்.ஆர் மீனாட்சி நன்றி நவில நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்ச்சி முழுவதையும் பள்ளியின் மாணவியர் தலைவி ஷிபானா பாத்திமா மற்றும் துணைத்தலைவி எஸ்.ஷிபா தொகுத்து வழங்கினார்கள்,