அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க 06.09.2025 அன்று செந்துறை வருகை தந்த கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாரும், கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகனும் செந்துறை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள புதுப்பிக்கப்பட்டு வரும் தந்தை பெரியார் சிலையினை பார்வையிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் பொன். செந்தில்குமார், மாவட்ட விவசாய அணி தலைவர் மா.சங்கர், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, அரியலூர் ஒன்றிய செயலாளர் த.செந்தில், ஆட்டோ தர்மா மற்றும் செந்துறை மதியழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.