சென்னை, செப்.7- ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால், தமிழ்நாட்டில் அரசு பணியில் உள்ள 85 ஆயிரம் ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பால், தமிழ்நாட்டில் பல்லாயி ரக்கணக்கான ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப் படுவர். அடுத்த 2 ஆண்டுகளுக்குள், ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவு, அனை வரையும் நிலைகுலைய வைத்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பால் பாதிக்கப்படாமல் ஆசிரி யர்களுக்குத் துணை நிற்கும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருப்பது ஆறுதல் தருகிறது. எதிர்காலம் பற்றிய கவலை சூழ்ந்த நிலையில் கற்பித்தல் பணியை மேற்கொள்ளும் பல்லாயிரக் கணக்கான ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழ்நாடு அரசு உடனடியாக தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.