இலண்டன், செப்.6- சமத்துவம் போற்றுவோம், பெரியாரியம் பழகுவோம் எனவும், பெரியாரின் பேரொளி உலகுக்கு வழிகாட்டப் படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட் டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப்பதிவு வருமாறு:
பழமைவாதங்களும் பிற்போக்குத் தனங்களும் நிறைந் திருக்கும் சமூகத்தில், அறிவார்ந்த உரையாடல் களை நிகழ்த்தி, மக்களுக்கு விழிப்புணர்வூட்டி, தலைநிமிரச் செய்து, அவர்களது நம்பிக்கையை வாக்குகளாகப் பெற்று, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் தமிழ்நாடு உயர்ந்திருப்பதற்கான அடித்தளம், அறிவாசான் தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்!
ஆயிரம் ஆண்டுகளாக அறிவார்ந்த பலரின் கனவாக இருக்கும் ஆக்ஸ்போர்டு அறிவாலயத் தில், ஆயிர மாயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் கனவாக எழுந்த சுயமரியாதை இயக்கத்தையும் புரட்சியாளர் பெரியாரையும் போற்றினேன்!
சமத்துவம் போற்றுவோம்!
பெரியாரியம் பழகுவோம்!
பெரியாரின் பேரொளி உலகுக்கு வழிகாட்டட்டும்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டுள்ளார்.