ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

2 Min Read

1.வாழ்க வாழ்க வாழ்கவே

தந்தை பெரியார் வாழ்கவே!

2.வாழ்க வாழ்க வாழ்கவே

அன்னை மணியம்மையார் வாழ்கவே!

3.வாழ்க வாழ்க வாழ்கவே

தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்கவே!

4.ஒன்றிய அரசே! ஒன்றிய அரசே!

ஏற்கமாட்டோம் ஏற்கமாட்டோம்!

எல்.ஓ.சி.எப் வரைவு அறிக்கையை

ஏற்கமாட்டோம் ஏற்கமாட்டோம்!

5.மூடநம்பிக்கையைத் திணிக்கின்ற

எல்.ஓ.சி.எப் வரைவு அறிக்கையை

ஏற்கமாட்டோம் ஏற்கமாட்டோம்!

6.அறிவியல் பார்வையை மழுங்கடிக்கும்

எல்.ஓ.சி.எப் வரைவு அறிக்கையை

ஏற்கமாட்டோம் ஏற்கமாட்டோம்!

7.தேசியக் கல்வி கொள்கையா?

காவிக் கல்விக் கொள்கையா?

8.எங்கும் திணிப்பு எங்கும் திணிப்பு!

எதிலும் திரிப்பு எதிலும் திரிப்பு!

9.விஞ்ஞானத்தைப் படிக்க வந்தால்

வேதம் படிக்கச் சொல்வதா?

கணக்குப் பாடத் திட்டத்தில்

கண்ட குப்பைகளைச் சேர்ப்பதா?

10.மன்னிப்புக் கேட்டு மண்டியிட்ட

சாவர்க்கர் வீரரா?

வணிகவியல் படிக்க வந்தால்

சாணக்கியன் பாடமா?

11.அண்ணல் காந்தி கொலைவழக்கில்

கபூர் கமிஷன் கண்டுபிடித்த

சதிகாரர் சாவர்க்கர்

இந்திய விடுதலை வீரரா?

12.பஞ்சாங்கம் எடுத்து முகூர்த்தம் பார்க்க

பல்கலைக்கழகப் பாடமா?

யூ.ஜி.சி. பரிந்துரைப்பது

பஜனை மடக் கூடமா?

13.ஏற்கமாட்டோம் மொழித் திணிப்பை!

ஏற்கமாட்டோம் பண்பாட்டு அழிப்பை!

ஏற்கமாட்டோம் வரலாற்றுத் திரிப்பை!

ஏந்தி நிற்போம் பகுத்தறிவு நெருப்பை!

14.யூ.ஜி.சி.யின் தலைமையகம்

டெல்லியா? நாக்பூரா?

கல்வி அமைப்பைச் சிதைக்க வந்தால்

கிழித்தெடுப்போம் நார் நாரா!

15.தேசியக் கல்விக் கொள்கை என்னும் பெயரால்

காவிக் கொள்கையைத் திணிப்பதா?

தேசியக் கல்விக் கொள்கை என்னும் பெயரால்

தனியார் மயத்தை வளர்ப்பதா?

தேசியக் கல்விக் கொள்கை என்னும் பெயரால்

சமூகநீதியைப் பறிப்பதா?

16.தேசியக் கல்விக் கொள்கை என்னும் பெயரால்

ஆர்.எஸ்.எஸ்.சின் கல்விக் கொள்கை

என்ன சொல்லுது? என்ன சொல்லுது?

சமஸ்கிருதத்துக்குச் சிம்மாசனம்

தமிழ்மொழிக்குச் சவாசனமாம்!

சமூகநீதிக்குச் சவக்குழியாம்!

சனாதனம் பற்றிப் பாடங்களாம்!

தனியார் மயம் – தாராள மயம்

கல்விக்கூடமெல்லாம் காவி மயம்!

அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா

நவயோதாக்களுக்கு கால்கோளாம்!

வானியல் இருந்த பாடத்திலே

ஜோதிடம் எல்லாம் இடம்பெறுமாம்!

வேதம், மந்திரம், பாராயணம்

மூடநம்பிக்கைகளுக்கு முடிசூட்டு!

இருபத்தியொன்றாம் நூற்றாண்டில்

இருபது நூற்றாண்டுகள் பின்னிழுப்பு!

தேவையில்லை தேவையில்லை

தேசியக் கல்விக் கொள்கை தேவையில்லை!

17.கொண்டுவா கொண்டு வா!

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வா!

18.ஒழித்துக் கட்டுவோம் ஒழித்துக் கட்டுவோம்

தேசியக் கல்விக் கொள்கையை ஒழித்துக் கட்டுவோம்!

19.போராடுவோம் வெற்றி பெறுவோம்!

வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *