கேரளாவில் இன்றும் நாம் சென்றால், “கடவுளின் தேசம்” (God’s own country) என்ற வரவேற்புப் பலகைகளைக் காணலாம். பசுமைக் காடுகளும், சலசலத்து ஓடும் அருவிகளும், நீல வண்ண மலைச் சிகரங்களும், வண்ண மலர் கூட்டங்களும் நிறைந்த இயற்கை வளத்தால் அந்தப் பெயர் என்று நாம் பலரும் நினைப்போம். ஆனால், மன்னர் மார்த்தாண்ட வர்மன் ஜனவரி 1750ஆம் அண்டு தன்னுடைய நாட்டை திருவனந்தபுரம் பத்நாபபுரம் பத்மநாபசாமிக்கு கொடையாகக் கொடுத்துவிட்டார். அரசர் “துணை ஆட்சியாளராக” (Vice Regent) இருப்பதாக ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டு கோயிலுக்குக் கொடுத்துவிட்டார். அதனால்தான் அது “கடவுளின் தேசம்” என்றானதாம். பத்மநாப சாமிக் கோயிலின் கோபுரத்தின் நான்கு மாடிகள் இவர் கட்டினார். கருவறைக்கு மூன்று வாசல்கள் – பக்கம், பக்கமாக இருக்கும் பத்மநாபசாமியின் பெரிய சிலை, படுத்திருக்கும் நிலையில் மூன்ற வாசல்களிலும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். மார்த்தாண்ட வர்மன் இந்தக் கோயிலைப் புதுப்பித்தார்.