கல்வி, ஆராய்ச்சி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் அதிக பங்களிப்புகளை கோரினார்
லண்டன், செப்.5- தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து பேசினார். அப்போது கல்வி, ஆராய்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் அதிக பங்களிப்புகளை கோரினார்.
தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இங்கிலாந்து நாட்டுக்கு சென்றுள்ளார்.
இங்கிலாந்து அமைச்சருடன் சந்திப்பு
லண்டன் நகரில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளுடனான கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் பாதுகாப்பு, விண்வெளி, கப்பல் கட்டும் நுண்ணறிவு, புதுப்பிக் கத்தக்க எரிசக்தி, ஜவுளி தொழில் நுட்பம் உள்ளிட்ட தொழில் நிறுவனங் களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டது. அந்தவகையில் ரூ.820 கோடி அளவில் முதலீடு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அந்த நாட்டின் அமைச்சரும், நாடாளுமன்ற துணை செயலாளருமான (இந்தோ-பசிபிக்) கேத்தரின் வெஸ்ட்டை லண்டனில் உள்ள வெளியுறவு, காமன் வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
அய்.டி. சேவைகள்
இந்த சந்திப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இங்கிலாந்து அமைச்சருடனான சந்திப்பின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘இந்தோ-பசிபிக்’ பகுதிகளில் பொருளாதாரரீதியாக மட்டு மல்லாமல், பசுமைப் பொருளாதாரத் தலைமை, கல்வி, ஆராய்ச்சி மற்றும் மீள்தன்மை கொண்ட கடல்சார் இணைப்பு போன்ற துறைகளில் தமிழ்நாட்டின் பங்கினையும், மின்சார இயக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அய்.டி. சேவைகள் மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் தமிழ்நாட்டின் வலிமையையும் எடுத்துரைத்தார்.
மேலும் அவர், வர்த்தகம் மற்றும் முதலீட்டு கூட்டாண்மை மூலம் இந்தத்துறைகளில் அதிகளவிலான இங்கிலாந்து நாட்டின் பங்களிப்பையும் கோரினார். பசுமை ஹைட்ரஜன், சூரிய சக்தி மற்றும் காற்றாலை ஆற்றல் ஆகியவற்றில் உலகளாவிய அளவில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது என்றும் எடுத்துக் கூறினார்.
காலநிலை மாற்றம்
காலநிலை மாற்ற உத்திகளில் இணைந்து செயல்படுவது குறித்தும், உயர்கல்வி, திறன் மேம்பாடு மற்றும் காலநிலை ஒத்துழைப்பில் இங்கிலாந்து – தமிழ்நாடு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. கலாச்சார மற்றும் புலம் பெயர் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும், தமிழ்நாட்டின் கடலோர நிலையைப் பயன்படுத்தி கடல்சார் ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சந்திப்பு முதலமைச்சரின் இங்கி லாந்து பயணத்திற்கு மேலும் வலு சேர்க்கும். ஏனெனில், ஏற்ெகனவே விண்வெளி,கடல்சார் நுண்ண றிவு, புதுப்பிக்கத்தக்கவை, ஜவுளி மற்றும் வடிவமைப்பு கல்வி ஆகியவற்றில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கார் தயாரிப்பு நிறுவனம்
இந்த சந்திப்பின்போது, இங்கிலாந்து நாட்டு அதிகாரிகளும், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதலமைச்சரின் முதன்மை செயலாளர் உமாநாத், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண்ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் தாரேஸ் அகமது ஆகியோர் உடனிருந்தனர்.
லண்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ‘ரோல்ஸ் ராய்ஸ்’ நிறுவனத்தின் தலைமை பரிமாற்ற அலுவலர் நிக்கலோ கிராடி ஸ்மித்தை சந்தித்து, தமிழ்நாட்டில் அந்த நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
சந்திப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து பயணத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் முதலீடு மற்றும் உலகளாவிய ஈடுபாடு குறித்து இங்கிலாந்து நாட்டிற்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமியை லண்டனில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் உலகளாவிய நடவடிக்கைகளுக்கு இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி தனது பாராட்டுகளை தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டின் தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் பொருளாதார செயல்திறனையும் பாராட்டினார். இங்கிலாந்து மற்றும் உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களுக்கு மிகவும் விரும்பமான இடங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும் என்றும் தெரிவித்தார்.