திருச்சி, செப். 5- திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரி, ராக்ஃபோர்ட் செஸ் அகாடமி, ஜே.சி.அய். ராக் டவுன் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து நடத்திய, மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் 31.08.2025(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இப் போட்டியில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, 11ஆம் வகுப்பு மாணவி எஸ்.கீர்த்தனா மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர் இசட்.முகம்மது ரியாஸ் ஆகியோர் மாவட்ட அளவில் ஏழாம் இடம் பிடித்து சாதனை படைத்து, பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.
மேலும் 5ஆம் வகுப்பு மாணவர் எஸ்.அர்ஷன் மற்றும் 1ஆம் வகுப்பு மாணவர் எஸ்.ஆத்விக் பிரியன் ஆகியோர் பங்கேற்புச் சான்றிதழ் பெற்றனர்.
மாணவர்களுக்குப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.