பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2025-2026ஆம் ஆண்டிற்கான ஆங்கில மன்ற விழா

3 Min Read

திருச்சி, செப். 5- பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆங்கில மன்ற  விழா 26.8.2025 அன்று தொடங்கியது. இதில் பள்ளி முதல்வர் தலைமை வகித்தார். முதலில் பள்ளி முதல்வரை JRC மாணவர்களின் அணிவகுப்போடு ஆங்கில மன்ற ஆசிரியர்கள் வரவேற்று மேடையில் சிறந்ததொரு அழைப்பிதழ் வழங்கினர். ஆங்கில மன்றத்தை பள்ளி முதல்வர் தொடங்கி வைத்தார்.

ஆசிரியர்கள் எவ்வாறு பாடம் நடத்துகின்றனர் என்பதை மாணவர்கள் நாடகம் மூலம் நடித்துக் காட்டினர். அனைத்து இலக்கணங்களையும் குறிப்பாக Prepositions, Non Finite Verbs, Degrees of comparison, American English and British English, Conversation, Poem Recitation, ஆகியனவற்றை கவிதை, பாடல், நடனம் மூலமாக மேடையில் நிகழ்ச்சிகள் மூலம் நடத்திக் காட்டினர்

ஆங்கில பாட ஆசிரியர்கள் அனைவரும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு அளித்தப் பயிற்சியின் நிகழ்ச்சிகளை மேடையில் மாணவர்கள் செய்து காட்டினர். ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் ஆங்கில மன்ற நிகழ்வுகள் மிகவும் பாராட்டும் வகையில் நடைப்பெற்றன.

மதியம் 2 மணி அளவில் பள்ளி முதல்வர் தலைமை ஏற்க தமிழ் மன்ற துவக்க விழா சிறப்பாக தொடங்கியது. சாலை பாதுகாப்பு விதிகளின் சிறப்புகள், பனை மரம் மற்றும் பாகத்தின் பயன்பாடுகள், முளைப்பாரி பாடல்,  பன்முக கலைஞர் பேச்சு, பழமொழி சண்டை- சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல், ஒரு சொல்  பல பொருள், ஊர்களின் மருவு  பெயர்கள் ஆகியவற்றை மாணவர்கள் நடனம் ,பேச்சு மூலம் அழகாக எடுத்துக்காட்டினர்

தமிழ் மொழியினையும், தமிழ் பாட சம்பந்தமாகவும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக மாணவர்களுக்கு எளிமையாக அறிந்து கொள்ளும் வகையில் விளக்கினர்.

28.8.2025 காலை 10:30 மணி அளவில் கணித மன்ற விழா தொடங்கப்பட்டது. மாணவர்களின் வரவேற்போடு கணித மன்ற ஆசிரியர்கள் வாழ்த்து மடலை பள்ளி முதல்வருக்கு வழங்கியும், பயனாடை அணிவித்தும் சிறப்பித்தனர். பள்ளி முதல்வர் தலைமையில் விழா இனிதே தொடங்கியது.

நடனம் மூலம் மூளை செயல் திறனை விளக்கும் அபாகஸ் செயல்பாடுகள், Shape Dance, Brain gym Acitivity, Angles Dance, கவிதை, கணிதத்தின் சிறப்பை விளக்கும் பாடல் ஆகியவற்றை மாணவர்கள் தெளிவுற விளக்கி சிறப்பித்தனர்.

நடனம் மூலம் விழிப்புணர்வு

மதியம் 12.30 மணி அளவில் ஆசிரியர்கள் பூங்கொத்து வழங்கிட அறிவியல் மன்ற  விழாவை பள்ளி முதல்வர்  தொடங்கி வைத்தார். செல்லிடப்பேசி வருவதற்கு முன் பின் நாடகம், நெகிழி பயன்பாட்டை தவிர்த்தல், நடனம் மூலம் விழிப்புணர்வு. இதயம், செரிமான மண்டலம், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகளை உபகரணமூலம் விளக்குதல். மாசுபாட்டின் வகைகள்- நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றின் பாதிப்பு காரணிகள் மற்றும் தடுப்பு முறைகள் போன்ற பல செயல்பாடுகளை சிறப்புற செய்து காட்டினர்.

பெரியார் ஒளிப்படம்

மதியம் 2.30 மணி அளவில் சமூக அறிவியல் மன்ற விழா மாணவர்களின் மிகச் சிறப்பான வரவேற்போடு தொடங்கப்பட்டது. சமூக அறிவியல் மன்ற ஆசிரியர்கள் பெரியார் ஒளிப்படம் முதல்வருக்கு வழங்கி – முதல்வர் சமூக அறிவியல் மன்றத்தை தொடங்கி வைத்தார். சங்க கால நில அமைப்புகள், அன்னை தெரசா பற்றிய பேச்சு, மாவட்டங்களின் சிறப்பு அடைமொழிகள், சங்க கால குடவோலை முறை – உள்ளாட்சித் தேர்தல், பண்டமாற்று முறை – நாடகம், சுதந்திரப் போராட்ட வீரர்கள், வரலாற்று நினைவுச் சின்னங்கள், இந்திய வரைபடம், என்பனவற்றை பள்ளியின் கீழடி அகழ்வாராய்ச்சி காணொலி மூலம் விளக்கிக் காட்டினர்.

பள்ளி முதல்வர் மாணவர்களிடம் அய்ந்து மன்றங்களை பற்றிய கருத்துகளை கேட்டறிந்தார். பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக தமிழ்த் தாய் வாழ்த்துடன் மன்ற விழா மிகச் சிறப்பாக நிறைவடைந்தது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *