சென்னை, செப். 5- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பிப் பிள்ளைகளை ஒப்படைக்கிறார்கள்! பிள்ளைகள் பெற்றோரை விட ஆசிரியர்கள் சொல்வதையே அதிகம் நம்புகிறார்கள்…
அந்த மாணவர்களுக்குத் தமிழை, அறத்தை, அரசியலை, அறிவியலை என அனைத்தையும் கற்பித்து அவர்களின் உயர்வுக்காகப் பாடுபடும் நல்லாசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்! என தெரிவித்துள்ளார்.
அந்நாள் – இந்நாள்
பகுத்தறிவாளர் கவுரி லங்கேஷ் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நாள் 05.09.2017
திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜின் உருக்கமான பதிவு
கவுரி லங்கேஷ் நினைவேந்தல்: அநீதிக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கும்
கௌரி, உங்களை இழந்து தவிக்கிறோம். உங்களைக் கொன்றவர்கள் சுதந்திரமாக நடமாட, அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்கள் சிறையில் வாடுகிறார்கள்.
ஆனால் நாங்கள் உங்கள் குரலை ஒருபோதும் மௌனிக்க விட மாட்டோம். உங்களை நாங்கள் புதைக்கவில்லை, விதைத்திருக்கிறோம். என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக பதிவிட்டுள்ளார்.