காசா, செப். 5- காசாவில் இஸ்ரேல் ராணுவத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனா்களில் நான் கில் மூன்று போ் ஆயுதக் குழுக்களைச் சாராத பொதுமக்கள் என்று இஸ்ரேல் ராணுவ ரகசிய தரவுகள் தெரிவிக்கின்றன.
2025 மே மாத நிலவரப் படி, தங்களது தாக்குதலில் 8,900 ஹமாஸ் படையினா் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவத் தின் தரவுகள் குறிப்பிடுவ தாகவும், அந்த காலகட்டத் தில், காஸாவில் இஸ் ரேல் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 53,000-அய்க் கடந்திருந்ததாகவும் அந்த ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளவா்க ளில் நான்கில் மூன்று போ் பொதுமக்கள் என்ற தகவலையும் ரகசிய ராணுவத் தரவுகளைக் கொண்டு அந்த ஊடகங் கள் தற்போது கூறியுள்ளன.
கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,139 போ் உயிரிழந்தனா்; 200-க்கும் மேற்பட்டோா் பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்டனா். அதைத் தொடா்ந்து, காசாவில் இஸ்ரேல் முழு வீச்சில் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது.
காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காசாவில் இஸ்ரேல் சுமாா் 23 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 64,231 போ் உயிரிழந்துள்ளனா். மேலும், இந்தத் தாக்குதலில் இதுவரை 1,61,583 போ் காயமடைந்துள்ளனா்.