
பட்டுக்கோட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மல்லிகை சிதம்பரம் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (5.9.2025)
 
 

பட்டுக்கோட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட திமுக பொறுப்பாளர் பழனிவேல், மதுக்கூர் இளங்கோவன், ரூசோ , மாவட்டத் தலைவர் வீரையன், சிங்கப்பூர் தமிழழகன் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (5.9.2025)


புதுக்கோட்டை சந்திரசேகரன் (திமுக) தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார். (திருச்சி, 4.9.2025). தஞ்சைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தொண்டராம்பட்டு விழாக் குழு சார்பில் கு.அய்யாதுரை, ஜெகநாதன், உரத்தநாடு குணசேகரன், கபடி இராமகிருஷ்ணன், செந்தூரபாண்டியன் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (4.9.2025)


லால்குடி மாவட்ட தோழர்கள் சித்தார்த்தன், ஆல்பர்ட், மண்ணச்சநல்லூர் பெரியசாமி, அங்கமுத்து மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து விடுதலை சந்தா மற்றும் நன்கொடைகள் வழங்கினர் (திருச்சி, 4.9.2025)

 
			 
		 
		 
		 
		 
		