பா.ஜ.க. ஆளும் குஜராத், ம.பி. மாநில கல்வி வளர்ச்சியின் லட்சணம்….

2 Min Read

 10, 12-ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களில் 37 முதல் 45 விழுக்காடு பேர் தோல்வி!

புதுதில்லி, ஜூன் 1 – பாஜக ஆளும் குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில், 10-ஆம்  வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடி வுகள் வெளியாகியுள்ளன. இதில், மாணவர் களின் தேர்ச்சி விகிதம் மிகவும் மோச மானதாக அமைந்துள்ளது. தேர்வெழு தியவர்களில் 37 சதவிகிதம் முதல் 45 சத விகிதம் வரை- சரிபாதி அளவிற்கு மாணவ – _ மாணவியர் தோல்வியடைந் துள்ளனர். 

மத்தியப் பிரதேசத்தில், 7 லட்சத்து 26 ஆயிரம் மாணவர்கள், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியிருந்தனர். இவர்களில், 3  லட்சத்து 24 ஆயிரம் மாணவர்கள் தோல்வியடைந்துள்ள னர். தேர்வு எழுதியவர்களில் 45 சதவிகிதம் பேர், அதாவது சரி பாதி என்று கூறும் அளவிற்கு மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இதே தான் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளிலும் எதிரொலித்துள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 8 லட் சத்து 15 ஆயிரத்து 364 மாணவர்களில் சுமார் 3 லட்சம் மாணவர்கள் (37 சதவிகிதம் பேர்) தோல்வி அடைந் துள்ளனர்.  கடந்த 20 ஆண்டுகளில், இடையில் ஒரே  ஒரு ஆண்டைத் தவிர, 19 ஆண்டுகளாக மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிதான் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. இதேபோல பாஜக ஆளும் குஜ ராத் மாநில பொதுத் தேர்வு முடிவுகளும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளன. 

டபுள் என்ஜின் ஆட்சியில் குஜராத்தி மொழியில் 1 லட்சம் பேர் தோல்வி

குஜராத்தில் 2022-23 கல்வியாண் டில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய வர் களில் 2 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் – அதாவது, 35.38 சதவிகித மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். அதிலும், குஜ ராத்தி மொழிப்பாடத்தில் மட்டும் 1 லட்சத்து 7 ஆயிரம் மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். கணித பாடத் தில் 1 லட்சத்து 96 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்தனர்.

157 பள்ளிகளில்  ஒருவர்கூட தேர்ச்சி இல்லை

மாநிலத்திலேயே தாஹோத் மாவட் டத்தில் மொத்தமாக 40.5 சதவிகிதம் பேர்தான் தேர்ச்சி பெற்றுள்ளனர். 272 பள்ளிகள் 100 சத விகித தேர்ச்சி பெற்றுள்ளன. ஆனால், 1084  பள்ளிகளில் 30 சதவிகிதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதமே பதிவாகி இருக்கிறது. மிக வும் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென் றால், 157 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர் களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.  இந்தியா விலேயே அனைத்துத் துறை களிலும் முன்னேறிய மாநிலம் என்று குஜராத்தை பாஜக முன்னிறுத்தி வந்தது. ‘குஜராத் மாடல்’ என்ற முழக்கத்தையும் அது முன் வைத்தது. ஆனால், அது உண்மையில்லை; குஜராத் வளர்ச்சி என்பது ஊதிப் பெரிதாக்கப்பட்ட பலூன் என்று எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. அது தற்போது உண்மை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 91.39 சதவிகிதம். ஆனால், பாஜகவினரால் வளர்ந்த மாநிலமாக காட்டப்படும் குஜ ராத்தில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் வெறும் 64.62 சதவிகிதம். குஜராத்தைக் காட்டிலும், தமிழ்நாடு சுமார் 27 சதவிகிதம் அதிக தேர்ச்சி  விகிதத்தைக் கொண்டிருக் கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *