சென்னை, செப்.4 தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக ஜெர்மனி சென்றார். அங்கு முதலீடு ஈர்ப்பில் ஒப்பந்தங்களுக்குப்பின் முதலீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு பூங்கொத்து கொடுத்து மாபெரும் வரவேற்பு கொடுத்தனர். மேலும் அவருடன் சுயபடம் (‘செல்பி’) எடுத்து மகிழ்ந்தனர். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
இங்கிலாந்தில் கால் பதித்தேன். தொலைதூரக் கரைகளை கடந்து சென்றும் வீட்டில் இருப்பது போன்ற உணர்வை அளித்ததோர் வரவேற்பினால் அன்புடனும், பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.