‘நூறாண்டுக் காலச் சுயமரியாதை இயக்கம் – பெரியார் மற்றும் திராவிட இயக்கம், ஒரு சகாப்தம்’ என்கிற தலைப்பில் சென்னையில் வரும் செப்டம்பர் 11, 12ஆம் தேதிகளில் இருநாள் தேசியக் கருத்தரங்கம் சேப்பாக்கத் திலுள்ள சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் அரங்கில் நடைபெற உள்ளது.
பெரியார் திடலில் இயங்கி வரும் திரா விடர் வரலாற்று மய்யமும், சென்னை பல்கலைக்கழகத்தி லுள்ள அறிஞர் அண்ணா பொது விவகார ஆய்வு மையமும் இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்த உள்ளன. முழுக்க ஆங்கிலத்தில் நடைபெறவுள்ள இக் கருத்தரங்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு அறிஞர்கள் கல்வியாளர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்த உள்ளனர். சிறப்புமிக்க இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் மேலே உள்ள QR குறியீட்டினை ஒளிவருடி (scan) பதிவு செய்யவும்.
மேலும் விவரங்களுக்குத்
தொடர்பு கொள்ள வேண்டியது
முனைவர் கோ. ஒளிவண்ணன் +91984003705