பெய்ஜிங், செப். 4- இரண் டாம் உலகப் போரின் 80ஆவது ஆண்டு நிறைவையொட்டி, சீனா தனது முழுமையான அணு ஆயுத ஆற்றலை முதன்முறையாக உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. நிலம், வான் மற்றும் கடல் ஆகிய மூன்று வழிகளிலி ருந்தும் அணு ஆயுத ஏவு கணைகளை ஏவும் திறன் கொண்ட தனது பலத்தை, பெய்ஜிங்கில் நடைபெற்ற மாபெரும் ராணுவ அணிவகுப்பின் மூலம் பறைசாற்றியுள்ளது.
இந்த அணிவகுப்பு, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு ஒரு வலுவான எச்சரிக் கையாகக் கருதப்படுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் வடகொரி யத் தலைவர் கிம் ஜோங் உன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இந்த அணிவகுப்பைக் கூர்ந்து கவனித்தனர். இது சீனாவிற்கு உலக அளவில் அதிகரித்துவரும் ராஜதந்திர முக்கியத்து வத்தை உணர்த்துகிறது.
அதிநவீன ஏவுகணைகள்
அணிவகுப்பின் தொடக்கத்தில் பேசிய சீன அதிபர் சி சின்பிங், “இனி சீனாவை யாராலும் தடுக்க முடியாது” என்று உறுதியளித்தார். அவரது உரைக்குப் பிறகு, தியான்மென் சதுக்கத்தில் நடைபெற்ற அணிவகுப்பில், சீனாவின் அதிநவீன ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்தச் செயல், சீனா ஒரு புதிய உலக வல்லரசாக உருவெடுப்பதற்கான ஒரு தெளிவான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. இராணுவ நிபுணர்கள், சீனாவின் இந்த முன்னேற் றங்கள் உலகப் பாதுகாப்புக் கொள்கைகளில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருது கின்றனர்.