சென்னை, ஜூன் 1 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசவுள்ளதாக டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டத்திற்கு எதிராக தி.மு.க.வின் ஆதரவை கோருவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். டில்லியில் அரசு அதிகாரிகளை நியமிக்க துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் ஒன்றியஅரசு அவசரச் சட்டம் இயற்றியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, கொண்டு வரப்பட்டுள்ள இந்த அவசர சட்டத்திற்கு எதிரான செயல்பாடுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் களை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார்.
Will be meeting Tamil Nadu CM Thiru @mkstalin in Chennai tomorrow (1st June) to seek DMK’s support against Centre’s unconstitutional-undemocratic ‘Anti-Delhi’ Ordinance. – Arvind Kejriwal (@ArvindKejriwal) May 31, 2023
இதன்படி, மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்துப் பேசுகிறார்.