திருச்சி, செப். 3- பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் பட்டயப்படிப்பு மாணவர்கள் நாகமங்கலம் ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை 28.08.2025 அன்று பார்வையிட்டனர். ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்கள் மருத்துவர் க. கோவிந்தராஜ் மற்றும் மருத்துவர் சசிபிரியா கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் மருத்துவக்குழுவினர் புற்றுநோய் பரிசோதனை ஆய்வுக்கூடம், கதிரியக்க சிகிச்சை மற்றும் மருந்தியல் சிகிச்சை முறைகளை நேரடியாக பார்வையிட்டனர். மேலும் மருத்துவப் பயனாளிகளின் நேரடி அணுகுமுறை, மருந்தக செயல்பாடுகள் அனைத்தையும் பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து 02.092025 அன்று புதுக்கோட்டை சாலை மண்டையூரிலுள்ள சித்த வனத்தை பார்வையிட்டு சித்த மருந்துகள் தயாரிப்பு குறித்து அறிந்து கொண்டனர். அதன் பொது மேலாளர் டாக்டர் செந்தில் வேல் பாண்டியன் தலைமையில் பல்வேறு நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் சித்த மருந்துகள் தயாரிப்பு முறைகளை மாணவர்கள் பார்வையிட்டு விளக்கம் பெற்றனர். மேலும் தயாரிப்புகள் கடந்து தரத்தை உறுதி செய்தல், சந்தைப்படுத்துதல் மற்றும் மருத்துவப் பயனாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்குதல் தொடர்பான அனைத்து தகவல்களையும் மாணவர்கள் அறிந்துகொண்டனர்.
பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் இயக்குநர் பேரா. ச. இராஜேஷ், இணை இயக்குநர் முனைவர் சி. விஜயலெட்சுமி, பேராசிரியர்கள் ர. தினேஷ், டி. கோகிலவாணி ஆர். ஷக்தி மற்றும் செல்வி கே. ரெத்தினா ஆகியோர் மாணவர்களை வழிநடத்தினர். பாடத்திட்டம் கடந்து மருத்துவமனை மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களை பார்வையிட்டது தங்களது மருந்தியல் ஆய்வுத் திறனை வளர்த்ததாக மாணவர்கள் தெரிவித்ததோடு இத்தகைய பெரும் வாய்ப்பை வழங்கிய கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை, ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்கள் மருத்துவர் க. கோவிந்தராஜ், மருத்துவர் சசிபிரியா கோவிந்தராஜ் மற்றும் சித்த வனத்தின் பொது மேலாளர் டாக்டர் செந்தில் வேல் பாண்டியன் மற்றும் மருந்தியல் குழுவினருக்கு தமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.