வடலூர், செப்.3 கடந்த 1.9.2025 அன்று மாலை 6.30 மணிமுதல் 9 மணிவரை வடலூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் விழா வடலூர் நகரத் தலைவர் சு.இராவணன் தலைமையில் நடைபெற்றது வடலூர் நகர செயலாளர் இரா. குணசேகரன் அனைவரையும் வரவேற்றார். கழகக் காப்பாளர் அரங்க பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் நா தாமோதரன், மாவட்டச் செயலாளர் க.எழிலேந்தி, கடலூர் மாநகரத் தலைவர் தென்.சிவக்குமார், மாவட்டத் துணைத் தலைவர் சி.மணி வேல், மாவட்ட துணை செயலாளர் நா. பஞ்சமூர்த்தி, மாவட்ட மகளிரணி தலைவர் செ.முனியம்மாள் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
திராவிட இயக்க ஆய்வாளர் சிவ இளங்கோ தொடக்க உரை ஆற்றி னார். திமுக மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் தேர்தல் பணிக் குழுச் செயலாளர் இள. புகழேந்தி சிறப்புரை ஆற்றினார். நா. உதயசங்கர், இரா.பெரியார் செல்வம், இரா.மாணிக்கவேல், டிஜிட்டல் ராமநாதன், கோ.வேலு, இரா.முத்தையன், த.கனகராசு, எ.திரு நாவுக்கரசு, உ.குணசுந்தரி, தங்க.பாஸ்கர், செ.சத்யாவதி, இரா.ராஜேந்திரன், தீன.மோகன், இரு.ராஜேந்திரன், சி.தர்ம லிங்கம், இரா.கண்ணன், பாவேந்தர் விரும்பி சவுரிராஜன், தீபக்ராஜ், அசோக்குமார், கு.தென்னவன், செல் சேகர், ராயர், உமா ஜெயசிறீ, கு.குணசுந்தரி, தா.தமிழ்மணி, அபினேஷ், அன்பரசன், பரதன், கோ.ராஜேந்திரன், வெற்றி ச்செல்வன், பெ.சுமலதா, பெ.அறிவுப்பொன்னி, வே.மகாலட்சுமி ஆகியோரும், கு.வள்ளி மணவாளன், நா.சக்கரவர்த்தி, க.வரதராஜன், ச.இளங்கோவன், கி.பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,
முடிவில் வடலூர் நகர அமைப்பாளர் நா.முருகன் நன்றி கூறினார்.