தஞ்சை, செப்.3 தஞ்சாவூர், மாதாக் கோட்டை சாலை பூபதி நினைவு பெரியார் படிப்பகமும், தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டமும் இணைந்து நடத்திய சிறப்புக் கூட்டம் 30.8.2025 அன்று மாலை 6 மணியளவில் அன்னை மணியம்மையார் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் மு.செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். விடுதலை வாசகர் வட்ட துணைத் தலைவர் வெ.துரை தலைமை உரையாற்றினார். விடுதலை வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜேம்ஸ், விடுதலை வாசகர் வட்ட புரவலர் மருத்துவர் த.அருமைக்கண்ணு முன்னிலை உரையாற்றினார்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைச் செயலாளர் முனை வர் ந.எழிலரசன் அறிமுக உரை யாற்றினார். விடுதலை வாசகர் வட்ட தலைவர் பி.ஜி ராஜேந்திரன் (மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்) தொடக்க உரையாற்றினார். ‘‘அறிஞர் அண்ணாவின் நாடாளுமன்ற ஜன நாயக விழுமியங்கள்’’ என்னும் தலைப்பில் பேராசிரியர் பெ. ராமஜெயம் (உதவிப்பேராசிரியர், சமூக நீக்கல் மற்றும் சேர்த்தல் கோட்பாட்டு ஆய்வு மய்யம் பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி) உரையாற்றினார். இந்நிகழ்வில் அறிஞர் அண்ணாவின் நாடாளுமன்ற உரைகள் பற்றியும், நாடாளுமன்றத்தில் அண்ணாவின் செயல்பாடுகள் குறித்தும் சிறப்பானதொரு உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கு கழகப் பேச்சாளர் முனைவர் ராஜவேலு இணைப்புரை வழங்கினார். விடுதலை வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.என். குசலவன் நன்றியுரை ஆற்றி னார்.
இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக பாவலர் பொன்னரசு, தந்தை பெரியார் பாடலை பாடினார். கழக மாவட்ட இளைஞரணி தலைவர் ஆ.பிரகாஷ், மாவட்ட துணைத்தலைவர் பா.நரேந்தி ரன், ப க மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல், முனைவர் ம.வசந்த், வீ.மகிழன், கழகப் பேச்சாளர் பூவை. புலிகேசி, ஆர்.சின்னச்சாமி, இரா.மகா லிங்கம், ஜோன் மார்சல், விடுதலை வாசகர் வட்ட பொறுப்பாளர்
எஸ்.என்.குசலவன், பக மாவட்ட தலைவர் ச.அழகிரி, பிரகாஷ் (மும்பை), மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், எ.ர.அஞ்சுகச்செல்வன், ஜோ.வியானி விஸ்வா, மாநகர துணைச்செயலாளர் இரா.இளவரசன், சு.சசிக்குமார், கு.முருகானந்தம், மாவட்ட தொழிளாலரணி செயலாளர் ச.சந்துரு, விடுதலை வாசகர் வட்ட உறுப்பினர் அ.குழந்தைசாமி, கலி.பகுத்தறிவு, பகுத்தறிவு ஊடகத்துறை மாநில செயலாளர் மா.அழகிரிசாமி, பொ.இ.பகுத்தறிவு, சமூககாப்பு அணி இயக்குநர் தே.பொய்யாமொழி, பேரா.ச.சந்திரசேகரன், ஜெ.பெரியார் கண்ணண், என்.கார்மேகம், விசிறி சாமியார் வி.முருகன், தங்க வெற்றிவேந்தன், உதவி பேராசி ரியை ஆனந்தவள்ளி, விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஏவிஎன்.குணசேகரன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இரா.வெற்றிக் குமார், ஆ.செயராமன், ஆ.யோவான், முனைவர் சா.மு.ஜெய்னம்பு பர்வ வீன்,சோ.தியாகராசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.